குறைபாடுள்ள பெண்களின் பிரச்சினையை சோதனைக்குழாய் முறை மூலம் தீர்த்து கருத்தரிக்க வைப்பதுபோலவே, ஆண்களின் குறைபாட்டைத் தீர்க்க இக்ஸி என்ற முறை உள்ளது. விந்தணு உற்பத்தி குறைவாக இருந்தாலோ அல்லது சுத்தமாக இல்லாமல் இருந்தாலோ கவலையேபட வேண்டாம். இக்ஸி முறை இருக்கிறது.

சோதனைக்குழாய் முறையில் பல உயிரணுக்களைச் செலுத்தி கருமுட்டையுடன் இணையச் செய்வார்கள். ஆனால் இக்ஸி முறையில், விந்துப்பையில் இருந்து ஆணின் நல்ல ஒரு உயிரணுவை எடுத்து, பெண்ணின் கருமுட்டையில் துளையிட்டு அதில் ஊசி மூலம் உயிரணுவைச் செலுத்தி கரு உருவாக்கம் செய்வார்கள். இந்த முறை 100 சதவீதம் வெற்றியைத் தருகிறது.

Pin It