ஹார்மோன் குறைபாடு இருக்கும் பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தியாகாமல் போய்விடும். இதனால் குழந்தைப்பேறு பாதிக்கப்படும். சில பெண்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி இல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. கருக்குழாய் அடைப்பு இருந்தால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. ரத்தசோகை, புரதச் சத்துக் குறைவு ஆகியவையும் மலட்டுத்தன்மைக்கு காரணங்களாகின்றன.

ஆணுக்கு விந்தணு குறைபாடு இருந்தாலோ அல்லது பெண்ணுக்கு கருமுட்டை பாதிப்பு இருந்தாலோ அவற்றை மருந்து கொடுத்து சரிப்படுத்தி விடலாம். கருக்குழாயில் அடைப்பு இருந்தால் அதை மருந்து கொடுத்து சரிப்படுத்த முடியாது. இத்தகைய குறைபாடு உடையவர்களுக்கு சோதனைக்குழாய் முறை கைகொடுக்கிறது.

ஆணின் உயிரணுக்களையும், பெண்ணின் கருமுட்டையையும் உடலுக்கு வெளியே இணைத்து கருவுறச் செய்து மீண்டும் கர்ப்பப் பையில் கொண்டு வந்து வைப்பதே சோதனைக்குழாய் முறையாகும். உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை இலண்டனில் உள்ள பான்ஹால் மருத்துவமனையில் 1978 ஜூலை 25ம் தேதி பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் லூயி பிரவுன்.

Pin It