மனிதனுக்கு அழகூட்டுவதில் கூந்தல் முக்கியமான ஒன்று, இலக்கியங்கள் மங்கையின் கூந்தலுக்கு வெகுவாக மரியாதை செய்கின்றன. வெளிநாட்டு இலக்கியங்களில் கூட சாம்சன் மற்றும் டிலைலா நாடகத்தில் சாம்சனின் வலிமைக்கும் வசீகரத்திற்கும் கூந்தல் காரணம் என்று காட்டப்படுகிறது. கருப்பு முடி நரைக்கத் தொடங்கினால் கவலை கொண்டவர்கள் சாம்ராஜ்யங்களை தங்கள் வாரிசுகளிடம் ஒப்படைத்துள்ளனர். தசரதனை அப்படித்தான் ராமாயணம் காட்டுகிறது.

இப்பொழுதோ வித விதமான ஹேர்டைகள் வந்து வெண்முடி கருப்பாகி வித வித அழகு கூட்டிகொள்கிறது. இளமையான தோற்றத்தை எடுத்துக்காட்டுகிறது. இளைஞர்கள் முடியைச் சீவுவதும் கலைப்பதுமான ஸ்டைல்களில் கண்ணாடிக் காதலர்களாக மாறுகின்றனர். வனிதையர்கள் கூந்தலை வித விதமாக அலங்கரித்துக்கொள்கின்றனர். இப்படிப் பட்ட தலைமுடிக்கு பேராபத்து பொடுகுகளால் தோன்றுகிறது. பொடுகுத் தொல்லைகள் என்பது சிறுவர் முதல் பெரியவர்வரை தொல்லைப்படுத்தும் ஒன்றாகும்.

சிறிதான் வெள்ளை நிறத்துடன் தலையில் ஏற்படும். இந்த பொடுகானது தலை சீவும் போது முதுகு, பின் கழுத்து, பின் காது போன்றவற்றில் வெள்ளை செதிலாக உதிரும். அரிப்பு அதிகமாக இருக்கும். இதனை விரட்டுவதற்குத் தலையில் சாம்பு போட்டுக் குளித்து எவ்வளவுதான் விரட்டினாலும் தீர்ந்தது போல் தோன்றும். ஆனால் திரும்பவும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அதே பகுதியில் மீண்டும் தோன்றும்.

பொடுகு தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் POVALE எனப்படும் பங்கஸ் கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். இது அதிகமாக நெற்றி, மூக்கு மடிப்பு, காது பின்புறம் மற்றும் தலையில் அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrheic dermatitis. என்று பெயர்.

பெரும்பாலும் பருவ வயதில் உடலில் பல வகையான ஹார்மோன்களின் மாற்றம் ஏற்படும். அந்த நேரத்தில் எண்ணெய்த் தன்மை அதிகம் இருப்பதால் முகப்பரு போன்றவை உண்டாகும் அந்தப் பருவ வயதை கடந்த பின் முகப்பரு உண்டாவதில்லை. பொடுகு அப்படி இல்லாமல் மூன்று கட்டமாக வரும். பிறந்த ஒரு வயதுக்குள் வரும், பின் பருவ வயது மற்றும் பருவம் தாண்டிய வயதுகளில் வரும். இந்த கால கட்டங்களில் பொடுகு போய்ப் போய் வரும்

இன்றைய மீடியாக்களில் பொடுகுகென்று ஏகப்பட்ட விளம்பரங்கள் ஆயுர்வேதம், சித்தா, என்றெல்லாம் கண் சிமிட்டுகின்றன. தோய்த்த உடனே போகிறது. ஒரே நாளில் பொடுகு ஓடுகிறது என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றன. அவற்றை நம்பி வாங்கித் தேய்க்காமல் உங்கள் மருத்துவர் ஆலோசனைப் படி செயல்படுங்கள். ஏனென்றால் பொடுகின் தன்மையை அறிந்து உங்கள் மருத்துவரால் தான் மருத்துவம் செய்ய முடியும்.

சரியான மருத்துவம் செய்யாவிட்டால் இந்தப்பொடுகு போவது போல் தோன்றும் மீண்டும் வரும். அதனால் இதற்குத் தொடர் மருத்துவம் செய்வது தான் உகந்தது. ஒருவரின் முடியில் சத்தற்ற தன்மை நிலவினால் அங்கு பொடுகு வர வாய்ப்பு இருப்பதாக உறுதி செய்யப்படாத மருத்துவத்தகவல்கள் இருக்கின்றன. இருந்தாலும் பொடுகு என்பது நாம் குறிப்பிட்ட காலங்களில் போவது போல் தோன்றி மீண்டும் தோன்றும். என்வே உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி நீங்கள் செயல்பட்டுப் பொடுகை விரட்டுங்கள்.

20 முதல் 25 வயதுக்குப்பின் எப்படி முகப்பரு வராமல் இருக்குமோ அதே போன் தான் பொடுகும் அந்தப் பருவத்திற்குப் பின் வராது. பால பருவம் மற்றும் பருவ வயதுகள் வரை என்ன மருத்துவம் செய்தாலும் போய்ப்போய் வரும் பொடுகை தொடர் மருத்துவத்தால் விரட்டுவோம் 

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

Pin It