அலோபதி மருத்துவ சிகிச்சையை அளிக்கும்போது, அலோபதி மருத்துவர் நோயாளருக்கு ஏற்பட்டுள்ள நோயைக் குணப்படுத்த தகுதியில்லாத கெடுதலை உண்டாக்கும் தன்மையுள்ள மருந்துகளைப் பயன்படுத்தும்போது, அந்நோயாளருக்கு ஏற்பட்டுள்ள நோயானது குணமாகாமல், பின்னர் சில காலம் கழித்து பல்வேறு நோய்களாக வெளிப்படுகின்றன. இவ்வகை நோய்களை நாம் நாட்பட்ட நோய்கள் என்கிறோம். இவ்வகை நாட்பட்ட நோய்களை அந்நோயாளர் ஹோமியோபதி மருத்துவரை அணுகி குணப்படுத்தச் சொல்லும் போது, ஹோமியோபதி மருத்துவர் கண்டிப்பாக அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட வேண்டும். ஏனெனில் இவ்வகை நாட்பட்ட நோய்களை, எந்த ஒரு ஹோமியோபதி மருந்தாலும் குணப்படுத்த இயலாது.

       ஆனால் ஹோமியோபதி சிகிச்சை முறையில், இவ்வாறெல்லாம் நாட்பட்ட நோய்கள் உருவாவதில்லை என்ற உண்மையை ஒவ்வொரு உண்மையான ஹோமியோபதி மருத்துவரும் அறிவர்.

       தவறான உணவு முறை, உடல் ஏற்றுக் கொள்ளாத தட்பவெப்பநிலை மாற்றங்கள் மற்றும் பருவக் கால மாற்றங்கள், தகுதிக்கு மீறிய மனம் மற்றும் உடல் உழைப்பு, உடலில் ஏற்படும் கடுமையான காயங்கள், மனதை கடுமையாக வாட்டும் துயரச் சம்பவங்கள், அளவுக்கதிகமான அச்ச உணர்வு போன்ற காரணங்களில் ஏதேனும் ஒன்று, நோயாளரை கடுமையாக பாதிப்பதினால், சமீபத்தில் அரைகுறையாக குணமடைந்த நோய்களில் ஏதேனும் ஒன்று, புதிய நோய்க் குறிகளுடன் மீண்டும் ஏற்படும்போது, அந்நோயை பூரணமாகக் குணப்படுத்த, சாதாரண ஹோமியோபதி சிகிச்சையால் இயலாது. மீண்டும், மீண்டும் அதே நோய் தோன்றும். இவ்வகை நோயையும் நாம் நாட்பட்ட நோய் என்றே அழைக்க வேண்டும். இந்நோய் மீண்டும், மீண்டும் தோன்ற, நோயாளரின் உடலில் குடிக் கொண்டுள்ள சோரா நச்சு தான் காரணமாகும். எனவே, இந்நோயைக் குணப்படுத்த சோரா நச்சு முறிவு மருந்தைப் பயன்படுத்த வேண்டும். அதுவும், ஒத்த குறிகளுடைய ஹோமியோ மருந்தாகவே இருக்க வேண்டும்.

       மனதுக்கு மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பொருளாதார ரீதியில் ஏற்பட்ட உயர்வுகள், மனதுக்கு உற்சாகம் ஊட்டும் சுற்றுலாக்கள், உடலுக்கு உரமூட்டும் பருவக் காலங்கள், ஆரோக்கியத்தைக் கூட்டும் தட்பவெப்ப நிலைகள் போன்ற காரணங்களால், நோயாளரின் நோய் நிலை சற்றுத் தணியக்கூடும். இதை ஹோமியோபதி மருத்துவர் தவறாக நோய் குணமாவதாக நினைக்கக் கூடும். மேலும், நோயாளரும் தனக்கு நலம் ஏற்பட்டு விட்டதாகக் கூறுவார். ஆனாலும் நோய் முற்றிலும் குணமாவதில்லை. மீண்டும் இம்மகிழ்ச்சிகரமான இச்சூழ்நிலைகள் மறைந்த பின்னர், நோயாளரின் துயரங்கள் மீண்டும் கூடிவிடும். இத்துயரங்களை பலமுறை ஆய்வு செய்து சிகிச்சையளித்தாலும், நோய் முழுமையாக குணமாகாது. மீண்டும் மீண்டும் நோய்த் துயரங்கள் தோன்றி, நோயாளரை வாட்டும். மேலும், அந்நோய் புதுப்புது குறிகளுடன் தோன்றி, மருத்துவரைக் குழப்பும். இந்நோயையும், நாட்பட்ட நோய் என்றே கருத வேண்டும்.

       இந்நோய்க்கான உண்மையான காரணம், நோயாளருக்கு, முன் ஏதோ ஒரு காலத்தில், ஏற்பட்ட சொறி-சிறங்கு போன்ற சரும நோய் தான். ஆனால் நோயாளர், தனக்கு முன்னொரு காலத்தில், சரும நோய் ஏற்பட்டது என்பதை நினைவு கூறமாட்டார். மேலும், மருத்துவர் தனது திறமையான துயரர் ஆய்வின் போது, இது பற்றி சந்தேகித்து, நோயாளருக்கு நினைவூட்டினாலும், நோயாளரால் அதை நினைவு கூற முடிவதில்லை. அத்தகைய சரும நோய்க்கு, சிகிச்சையளித்த அலோபதி மருத்துவர், தனது தவறான சிகிச்சையின் காரணமாக, நோயை உடலின் உள்ளே அமுக்கிவிட்ட தால், மீண்டும் அச்சரும நோய் இப்போது தோன்றி, நோயாளரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம், நோயாளரின் உடலில் உறங்கிக் கிடந்த சோரா நச்சு மீண்டும் விழித்துக் கொண்டது தான் எனவே, இந்நோயைக் குணப்படுத்த, ஹோமியோபதி மருத்துவர் ஒத்த குறியுள்ள சோரா நச்சு முறிவு மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.

       நாட்பட்ட நோய்கள் தோன்ற, மூன்று நச்சுகளான சோரா, சைக்கோசிஸ் மற்றும் சிபிலிஸ் ஆகியவைகளே அடிப்படைக் காரணங்களாகும். ஆகவே, நாட்பட்ட நோய்களை குணப்படுத்த அந்நோயாளரின் உடலில் எந்த நச்சு குடிக் கொண்டுள்ளது என்பதை அறிந்து அதற்குரிய ஹோமியோ நச்சு முறிவு மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

       சில சமயங்களில், இந்நச்சுகள் கூட்டாக சேர்ந்தும் குடியிருக்கும். எனவே, உரிய நச்சு முறிவு மருந்துகளைப் பயன்படுத்தி, நோயாளரை பூரணமாக குணப்படுத்த வேண்டும்.

1. சோரா நச்சு.

       மூன்று நச்சுகளில், சோரா நச்சு தான் மிகவும் பழமையானது. இது, உலகெங்கும் பரவியுள்ளது. மிகவும் அழிவு சக்தி வாய்ந்தது. ஆனால் இந்த மூன்று நச்சுகளில், சோரா நச்சுதான் எல்லோராலும் புரிந்துக் கொள்ள முடியாத நச்சுவாகும். இந்நச்சுப் பற்றி, பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. மனித இனத்தைப் பல்லாயிரக்கணக்காண ஆண்டுகளாய்ச் சின்னாபின்னப்படுத்தி வந்துள்ளது. இச்சோரா நச்சு, பலவகையான நாட்பட்ட நோய்களை உற்பத்தி செய்துள்ளது. சோரா நச்சு அல்லது அரிப்புக் குணமுடைய நாட்பட்ட நோய்தான். எல்லா நாட்பட்ட நோய்களுக்கும் மூத்தது, பாதரஸம், காரீயம், வெள்ளைப் பாஷாணம் (Arsenic) முதலிய மருந்துகளைக் கண்மூடித்தனமாய் அலோபதி மருத்துவர்கள் கையாண்டு சிகிச்சையளித்ததால் உருவானது தான், சோரா நச்சுவாகும். மேலும், மேக வெட்டை (Gonorrhea) மற்றும் மேகக் கிரந்தி (Syphilis) போன்ற நோய்கள் தோன்றக் காரணமும் இந்த சோரா நச்சுதான். மேலும், எல்லா நாட்பட்ட நோய்களும் தோன்ற இந்த சோரா நச்சு தான் காரணமாகும்.

        மனித சமுதாயம் முன்னேறி, நாகரீகமடைகையில், சோரா நச்சுவின் காரணமாக முற்காலத்தில் தோன் றிய முதல் நோயான குஷ்ட நோய் மறைந்து, உடலின் வெளிப்புறத்தில் வெளிப்படும் சாதாரண சொறி-சிரங்கு சரும நோயாக உருமாறி விட்டது.

        இந்த சொறி-சிரங்கு நோயைக் குணப்படுத்த, அலோபதி மருத்துவர்கள் கந்தகம், காரீயம், தாமிரம், துத்தநாகம் மற்றும் பாதரஸம் போன்ற அலோபதி வெளிப் பூச்சு களிம்பு மருந்துகளைப் பயன்படுத்தி அளிக்கும் சிகிச்சைகளால், சருமத்தின் மேலிருக்கும் சோரா நச்சுவின் புறக் குறிகளை உடலின் உட்புறம் அமுக்கி, பல்வேறு நாட்பட்ட நோய்களை உற்பத்தி செய்கின்றனர்.

              சொறி-சிரங்கு நோய் ஏற்பட்டவுடன், உடலின் வெளிப்புறத்தில் ஒரு சில கொப்புளங்கள் உருவாகும். இந்த கொப்புளங்களால் நோயாளருக்கு, தாங்க முடியாத அரிப்பு, இடைவிடாமல் ஏற்படும். இந்த அரிப்பை தாங்க முடியாமல், நோயாளர் அடிக்கடி சொறிந்துக் கொள்ள வேண்டியிருக்கும். அப்படிச் சொறிந்துக் கொள்ளும் போது, இக்கொப்புளங்கள் உடைந்து, அதிலிருந்து சோரா நச்சு நீர் வெளியேறும். இந்நீர் சருமமெங்கும் பரவி, உடல் முழுவதும் பல கொப்புளங்கள் தோன்றத் துவங்கும். மேலும் விவரம் தெரியாமல், இந்நீரைத் தொடுபவர்களையும் இந்நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

       ஏழை, எளிய மக்களும், வசதிக் குறைந்த மக்களும் தான் அதிக அளவில் சொறி-சிரங்கு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், இவர்கள் இந்நோயை எளிதாய் எடுத்துக் கொண்டு, அதை உடனடியாகக் கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுவது தான். இதனால் எளிதில் இந்நோய் இவர்களிடையே அதிக அளவில் பரவுகிறது. இச்சொறி-சிரங்கு நோய் மிகவும் கொடூரத் தன்மை வாய்ந்ததாகும்.

       இந்த சொறி-சிரங்கு நோயை, அலோபதி மருத்துவர்கள், களிம்பு மருந்துகளைக் கொடுத்து, சிகிச்சை என்ற பெயரில், இந்நோயை உடலுக்கு உள்ளே அமுக்கி, நரம்புக் கோளாறுகள், வலிப்புகள், புற்று நோய், இரத்தம் நச்சுத் தன்மையடைவது, தசைகளும் நரம்புகளும் செயல் இழத்தல், காச நோய் போன்ற பல்வேறு மனம் மற்றும் உடல் நோய்களை, நாட்பட்ட நோய்களாக உருமாற்றுகின்றனர்.

       இந்த எல்லா நாட்பட்ட நோய்களுக்கும், அடிப்படைக் காரணமாக விளங்குவது, சோரா நச்சு தான்.

       சரும நோய்களைக் குணமாக்கும் கலை உண்மையில் திறமையான ஹோமியோபதி மருத்துவரிடம் தான் உள்ளது. ஏனெனில், அவருக்குத் தான் இந்த சொறி-சிரங்கு சரும நோய்க்குப் பின்னால் மறைந்திருக்கும் சோரா நச்சு பற்றிய அறிவு உள்ளது. இச்சோரா நச்சுவை முறிக்க, சருமத்தின் மீது தோன்றியுள்ள நோயை மட்டும் அழித்தால் போதாது, சருமத்துக்கு உள்ளே குடிப்புகுந்துள்ள சோரா நச்சுவையும் வீழ்த்த வேண்டும் என்ற வித்தை அவருக்கு மட்டும் தான் தெரியும். எனவே, அவர் சருமத்தின் மீது களிம்புகள் தடவி, நோயை உடலுக்கு உள்ளே அமுக்கி விடக் கூடாது என்பதை உணர்ந்து, உள்ளுக்கு மருந்து கொடுத்து, முழுநலனை உண்டாக்குகிறார். ஆனால், போலி ஹோமியோ மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறும் போது, இது இயலாமல் போகிறது.

       ஆனால், நேர்மையான மற்றும் திறமையான ஹோமியோபதி மருத்துவர்கள் தான், ஒருவனுடைய உயிராற்றல் உடலின் உள்ளிருக்கும் நோயின் கடுமையைத் தணிப்பதற்காகவே, சரும நோய்களை உண்டாக்கி, அவனுடைய விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்றுகிறது என்ற உண்மையை அறிவார்கள். மனித உயிர்களை நேசிக்கும் எந்த மருத்துவருக்கும், இந்த உண்மை புலப்படும். அவரால் தான் ஒரே சமயத்தில், சரும நோயையும், உடலின் உள்ளே இருக்கும் சோரா நச்சுவையும் ஒருங்கே முறித்து, நோயாளருக்கு முழுநலனை உண்டாக்க முடியும்.

2.சைக்கோசிஸ் நச்சு.

       மூன்று வகை நச்சுகளில், நாட்பட்ட நோய்களை மிகக் குறைந்த அளவில் உருவாக்கும் சைக்கோசிஸ் நச்சுப் பற்றி, இனி தெரிந்துக் கொள்வோம். இந்த நச்சு சில சூழ்நிலைகளில் மட்டுமே, தன் கொடூரமான வேலையை வெளிக்காட்டும்.

       ஐரோப்பாவில், பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலத்தில் தான் இந்த நச்சு, ஐரோப்பாவெங்கும் துர்ச் சதை வளர்ச்சி நோயாக பரவியிருந்தது. அதன் பின்னர், படிப்படியாகக் குறைந்து, இப்போது அபூர்வமாகி விட்டது. ஆனால், இந்த சைக்கோசிஸ் நச்சுவால் ஏற்பட்ட துர்ச் சதை வளர்ச்சிகளை குணப்படுத்த, இன்றைய அலோபதி மருத்துவம், அறுவைச் சிகிச்சை முறைகளைத் தான் கையாளுகிறது. இதன் மூலம் அவர்கள், நோயைக் குணப்படுத்துவதற்கு மாறாக, மீண்டும் நோயை கடுமையானதாக மாற்றுகிறார்கள். எப்படியெனில், அறுவைச் சிகிச்சை முடிந்த சில காலத்திற்குப் பின்னர், மீண்டும் புதிய துர்ச்சதை வளர்ச்சிகள் உருவாகுகின்றன. இதையும் மீண்டும் அவர்கள், புதிய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு குணமாக்க முயல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் நோயாளர் உடலின் உள்ளே உறங்கிக் கிடக்கும் சைக்கோசிஸ் நச்சுவைத் தூண்டி, முன்பைவிட கடுமையான முறையில் அந்நச்சு தன் இரண்டாம் நிலைக் குறிகளை வெளிப்படுத்த வைக்கிறார்கள்.

       ஆனால், ஒரு சாதாரண ஹோமியோபதி அறிவுள்ள மருத்துவரால் கூட, தூஜா என்ற ஹோமியோ மருந்தை, அதன் முப்பதாம் வீரியத்தில் ஒரு வேளைக் கொடுத்துப் பின்னர், மேக வெட்டை நோயை பூரணமாக குணப்படுத்த முடிகிறது.

3. சிபிலிஸ் நச்சு

       நாட்பட்ட நோய்கள் ஏற்பட அடிப்படைக் காரணங்களான மூன்று நச்சுகளில், இரண்டாவது நச்சுவாகிய சைக்கோசிஸ் நச்சுவே மிகவும் கொடூரமானது. ஆனால், மக்களிடம் அதிக அளவில் பரவியிருப்பது சிபிலிஸ் நச்சுவாகும்.

       கடந்த நான்கு நூற்றாண்டுகளாய், பல்வேறு நாட்பட்ட நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்குகிறது, இச் சிபிலிஸ் நச்சு. ஆனால் இந்நச்சு மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள சோரா நச்சுவுடனோ அல்லது அபூர்வமாக சைக்கோசிஸ் நச்சுவுடனோ கூட்டுச் சேரும்போது, இந்நச்சுவை வெளியேற்ற, ஹோமியோபதி மருத்து வர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.

இந்த சிபிலிஸ் நச்சுவுக்கு சிகிச்சையளிக்கும்போது, அது பின்வரும் மூன்று நிலைகளை எய்துகிறது.

       1. சிபிலிஸ் நச்சு மட்டும் தனித்தும், அதன் புறக்குறியாக மேகக் கிரந்தி நோயும் சேர்ந்திருத்தல். அல்லது அப்புறக் குறி, அலோபதி வெளிப்பூச்சு களிம்பு மருந்துகளால் உள்ளுக்கு அமுக்கப்பட்டு இருந்தால், அதன் பயனாக உடலின் உட்புறத்தில் உறங்கிக் கிடந்த சிபிலிஸ் நச்சு அந்நோயை அரையாப்புக் கட்டியாக உடலின் வெளிப்புறத்தில் வெளிப்படுத்தல்.

       2. சிபிலிஸ் நச்சுவின் புறக் குறியான மேகக் கிரந்தி நோயோ அல்லது அரையாப்புக் கட்டியோ குணமாகி விட்டாலும், சோரா நச்சுவுடனோ அல்லது சைக்கோசிஸ் நச்சுவுடனோ, சிபிலிஸ் நச்சு கூட்டுச் சேராமல் தனித்திருத்தல்.

       3. முன்பே இருந்து வருகிற நாட்பட்ட நோயுடன், அதாவது முன்பே வளர்ச்சியடைந்து விட்ட சோரா நச்சுவுடன் கூட்டுச் சேர்ந்த நிலை. இதன் காரணமாய் சிபிலிஸ் நச்சுவின் புறக் குறி, அப்படியே இருத்தல். அல்லது அலோபதி வெளிப்பூச்சு களிம்பு மருந்துகளால் நோய் உள்ளமுக்கப்பட்ட நிலை.

       இன்றைய அலோபதி மருத்துவர்கள் இந்நோயைக் குணப்படுத்த, அப்புண்ணை அரித்தெடுக்கக் கூடிய மருந்துகளையோ, சுட்டெரிக்கக் கூடிய மருத்துவ முறைகளையோ பயன்படுத்தி நோயை உடலின் உள்ளே அமுக்குகிறார்கள். இதனால் உடலின் உட்புறத் தில் உறங்கிக் கிடந்த சிபிலிஸ் நச்சு, அரையாப்புக் கட்டியாக உடலின் வெளிப்புறத்தில் வெளிப்படுகிறது. இதையும் கூட, சிகிச்சை என்ற பெயரால், வெளிப்பூச்சு களிம்பு மருந்துகளைப் பயன்படுத்தி, நோயை மீண்டும் உடலின் உட்புறத்தே அமுக்கிவிடுகிறார்கள். இதன் மூலம், உடலின் உட்புறத்தில் உறங்கிக் கிடந்த சிபிலிஸங நச்சு, கடுமையான தனது இரண்டாம் நிலைக் குறிகளை வெளிப்படுத்தி, உடலின் உள்ளே உள்ள நோயை, மேலும் கடுமையாக்கி விடுகிறது.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It