நவீன மருத்துவத்தின் இன்னொரு முகம்

       மருந்துகளை நிறுத்தினால் ஆபத்து காத்திருக்கிறது. நவீன மருத்துவம் என்று அழைக்கப்படும் ஆங்கில மருத்துவத்தில்தான் இந்தக் கொடுமை.

       மனச்சோர்வு, கவலை, மனநோய், தூக்கமின்மை மற்றும் வலிகளுக்காக பரிந்துரைக்கப்படும் பல மருந்துகள் நோயாளிகளை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாக்கி விடுகின்றன - மது மற்றும் போதைப் பொருட்களை போல இந்த விசயத்தில் சில ஆங்கில மருந்துகள் மது, அபின் ஹெராயின் போன்ற போதைப் பொருட்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல, சொல்லப் போனால் அவற்றை விட இன்னும் கொடூரமானவை. இத்ததைகய ஆங்கில மருந்துகளை சாப்பிடத் தொடங்கிவிட்டால் பின்பு அவற்றிலிருந்து விடுபடுவது சிரமம். அவ்வாறு விடுபட நினைத்து மருந்தை நிறுத்தினாலோ, குறைத்தாலோ கூட நோயாளி மிகுந்த துன்பத்திற்கு ஆளாக நேரிடும்.

       மருந்துகளை நிறுத்துவதால் திரும்பத் தாக்கும் தொந்தரவுகளை மீள் குறிகள் (Withdrawal Symptoms) அல்லது மீள் விளைவு எனக் குறிப்பிடுகிறார்கள். மருந்துகள் இல்லாது வாழ முடியாது என்ற மனநிலையையும் இம்மருந்துகள் ஏற்படுத்துகின்றன. இதனை எதிர் உணர்ச்சித் தாக்குதல் என்கின்றனர். இது குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படுகிறது.

       மருந்துகளுக்கு அடிமையாவது, அதிக அளவில் மருந்துகளை உட்கொள்வது. மருந்துகளை நிறுத்துவதால் மனதும் உடலும் துன்பத்திற்கு உள்ளாவது இவையனைத்தும் மருந்து உட்கொள்பவரின் இயல்பான உடல், மனக்குறிகள் அல்ல, மருந்துகளால் உடல் மற்றும் மனதில் ஏற்படும் செயற்கையான விளைவுகளேயாகும். இது எவ்வாறு நிகழ்கிறது?

பொதுவாக இத்தகைய மருந்துகள் இரண்டு வகைப்படுகின்றன.

1)     தளர்வுறச் செய்யும் மருந்துகள்:

       நோயாளிகளின் கோபம், கவலை, பதற்றம் ஆகியவற்றை குறைப்பதற்காக டாக்டர்கள் இத்தகைய மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இம்மருந்துகள் நரம்பு மண்டலத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. தசைகளைத் தளர்வுறச் செய்கின்றன. நோயாளி தூக்கக்கலக்கமாகவும், மன அழுத்தம் குறைந்ததாகவும் உணர்கிறான். தூக்க மருந்தாகவும், வலி நிவாரணிகளாகவும் கூட இம்மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மருந்துகளில் Halcion எனப்படும் மருந்து உலகமெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் விற்பனை உலகம் முழுவதும் 25 கோடி டாலரை எட்டியிருக்கிறது. மற்ற மருந்துகளில் சில : Xenax, Serax, Ativon, Thoraxin, Mellaril, Prolixin, Miltown, Equamil, Vistanil, Atarax, Benadeyl.

2)     தளர்வு நீக்கி மருந்துகள்: கவலை, சோகம், தளர்ச்சி, ஆகியவற்றை நீக்க இம்மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை நோயாளிகள் சோகத்துடன், சோம்பியும், தளர்வுற்றும், எந்த வேலையிலும் நாட்டமில்லாமலும் காணப்படுகின்றனர். இவர்களுக்கு Trycyclics, MOI(Monoamine Oxidase Inhibitors), SSRI(Selective Serotinine Reuptake Inhibitors), SNRI(Serotinine Noradrenalin Inhibitors) ஆகிய ரசாயன குடும்பங்களைச் சேர்ந்த Elavil, asendin, Celexa, Anafranil, Norpramin, Pertofrane, Adapine, Sinequan, Cymbalta, Lexapro, Luvax, Prozac, Effexor மற்றும் பல மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. மூளையில் சுரக்கும் Serotinnine எனும் வேதிப் பொருளை குறிவைத்து செலுத்தப்படுபவை SSRI மருந்துகள். இவற்றில் Prozac அதிக பட்ச புகாருக்கு உள்ளான மருந்தாகும். இந்த மருந்துகள் அனைத்தும் அவற்றின் பக்கவிளைவுகளை கணக்கில் கொண்டு மது, ஹெராயின் அபின், மர்ஜீவானா, மார்ஃபின் ஆகிய போதை மருந்துகளின் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

       சரி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன?

1)     மருந்துகளின் பெயரால் உடலுக்குள் நுழையும் ரசாயனங்களுக்கேற்ப உடல் தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கிறது. திரும்பத் திரும்ப மருந்துகளை உட்கொள்வதால் உடலின் தற்காப்பு அமைப்பு பாழ்படுத்தப்படுகிறது.

2)     மருந்துகளை செயலிழக்கச் செய்ய உடல் முனையும்போது மருந்துகளின் செயல்திறன் குறைகிறது. எனவே கூடுதல் மருந்துகளை மனம் நாடுகிறது.

3)     மருந்துகளை நிறுத்தினால், ஏற்கனவே மருந்துகளுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டுள்ள உடல் மருந்தில்லா நிலைக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கிறது. அதனால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.

4)     மருந்துகளை நிறுத்துவதால் வலி முதலான பிரச்சனைகள் முன்பிருந்ததைவிட இரண்டு, மூன்று மடங்கு அதிக பலத்துடன் திரும்புகின்றன. ஆகவே மனம் திரும்பவும் மருந்தை நாடுகிறது. மருந்தில்லாமல் வாழ முடியாது என்ற நிலை உருவாகிறது. பரிந்துரை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளையும், மீள் விளைவுகளையும் பற்றி எழுதுவதற்கு ஒரு புத்தகம் தேவைப்படலாம். இடம் கருதி ஒரு சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

       ஒருவர் எந்த மருந்தை எடுத்துக் கொள்கிறார், எந்த அளவில் எடுத்துக் கொள்கிறார், எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்பதை பொறுத்தே மீள் விளைவுகளின் கடுமை உணரப்படுகிறது.

       Opioid எனப்படும் ரசாயனத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் முப்பதுக்கும் மேற்பட்ட விற்பனைப் பெயர்களில் சந்தையில் கிடைக்கின்றன. Opioid உடன் Aspirin அல்லது Acetominiphan ஆகியவவை கலந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட விற்பனைப் பெயர்களில் கிடைக்கின்றன. இவையனைத்தும் மத்திய நரம்பு மண்டலத்தில் வேலை செய்பவை. பெரும்பாலும் வலி நிவாரணிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நிறுத்துவதால் குளிர் நடுக்கம், எலும்பு வலி தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படலாம், மீள் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நுரையீரல் இயங்காமல் நின்று போகவும் அதனால் மரணம் நேரிடவும் செய்யலாம்.

பிற மீள் விளைவுகள் :

-      கடுமையான சோர்வு

-      குளிர்ந்த அல்லது வெப்பமான வியர்வைப்பொழிவு

-      இருதய படபடப்பு

- மூட்டுக்கள் அல்லது தசைகளில் வலி

-      தொடர்ந்து கொட்டாவி விடுதல்

-      குமட்டல், வாந்தி

-      உடல், மனச்சோர்வு, கவலை

       இரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை நிறுத்துவதால் உயிருக்கே ஆபத்து நேரலாம்:

       SSRI மருந்துகளை நிறுத்தும் நோயாளிகள் மன நோயாளிகள் மன நோய்க்கு ஆட்பட்டு தற்கொலை, கொலை, திருட்டு, பாலியல் வன் முறை ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்புண்டு.

       உடலில் சுரக்கும் வேதிப்பொருள்களைக் குறித்த புதிய, புதிய கண்டுப்பிடிப்புகளால் அவற்றைக் குறிவைத்து தயாரிக்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

       ஆராய்ச்சிகள் முற்றுப்பெறாத நிலையிலேயே, குறைந்தபட்ச தகவல்களைக் கொண்டு அதனடிப்படையில் மருந்துக் கம்பெனிகள் மருந்துகளைத் தயாரித்து விற்பனைக்கு விடுகின்றன. புதிய மருந்துகள் சந்தைக்கு வருவதும், அவற்றின் மீது புகார்கள் எழுதுவதும் பின்பு அவை தடை செய்யப்படுவதும், மீண்டும் புதிய மருந்துகள் சந்தைக்கு வருவதுமான இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆங்கில மருத்துவர்கள் இத்தகைய மருந்துகளின் மீது முழு நம்பிக்கை (?) வைத்து தங்கள் தொழிலை நடத்தி வருகின்றனர், பாவம் அவர்கள்! மக்களும்தான்!

       1950களிலிருந்தே இவ்வகை மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இவற்றின் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்தாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த கணக்கெடுப்புகள், மற்ற விபரங்கள் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு ஊடகங்களின் வளர்ச்சிக்குப்பின்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. SSRI மருந்துகளின் மீள் விளைவுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விபரங்கள் சம்பவங்கள், பத்திரிகைச் செய்திகள் வழக்குகள் என 2700க்கும் மேற்பட்ட ஆவணங்களை www.ssristories.com என்ற இணையதளம் தொகுத்து வைத்திருக்கிறது. இவற்றில் 63 நோயாளிகளின் வினோதமான நடத்தைகள், பள்ளிகளில் மாணவர்கள் சகமாணவர்களை ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்ட 47 சம்பவங்கள், சாலை விதிகளை மீறுதல், கோர விபத்துகள், வானூர்திகளின் விபத்துகள் என 64 சம்பவங்கள், பிறரை சுட்டுக் கொன்றதான 500க்கு மேற்பட்ட சம்பவங்கள், பிறரை சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டு இறந்து போன 180க்கும் மேலான சம்பவங்கள், பணிபுரியும் இடத்தில் வன் முறையில் ஈடுபட்டதான பல்வேறு சம்பவங்கள், அமெரிக்க FDA (Food & Drug Administration) நிறுவனம் அவ்வப்போது மருந்துகளைக் குறித்து விடுத்த எச்சரிக்கைகள் அனைத்தும் அடங்கும். இந்த இணையதளத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் மிகவும் சொற்பமானவை. ஊடகங்களில் கவனத்துக்கு வராத சம்பவங்கள் எத்தனை, எத்தனையோ?

       நோய்கள் ஆபத்தானவையாக இருக்கலாம். அதைவிட மருந்துகள் ஆபத்தானவையாக இருக்கலாமா?

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It