நான் இருபது வருஷமா நூல் மில் வேலைக்கு போறேன். அங்கே இருக்கிற அக்கிரமத்தைச் சொல்றேன் கேளுங்க தினமும் மில்லுல காலை, மதியம் டீ குடுப்பாங்க. டீ குடிக்கிறதுக்கு டம்ளரும் குடுத்திருக் காங்க ஆனா அந்த டம்ளருல பிற்படுத்தப் பட்டவுங்க டீ குடிக்க மாட்டாங்க. அவுங்க வீட்டிலிருந்தே டம்ளர் கொண்டு வந்துருவாங்க. ஏன்னு கேட்டா.. அந்த டம்ளர்ல தாழ்த்தப் பட்டவுங்க டீ குடிச்சிருப்பாங்க.. அதுல நாங்க எப்படி குடிக்கறதுன்னு சொன்னாங்க. அதுக்கு நான், தாழ்த்தப்பட்டவுங்களாக இருந்தாலும் அவங்களும் மனுசங்கதானேனு கேட்டா, அதெப்படி அவங் களும், நாங்களும் ஒன்னாவமா? அந்தக் காலத்திலி ருந்தே இப்படித்தா இருக்குது இப்ப என்ன நீ புதுசா கேள்வி கேக்கற....
பாத்திங்களா இதுல இருந்தே தெறியுதா “மனு” அவுங்க மூளையில எப்படி பதிஞ்சிருக்கு தென்று.
நான் அவங்ககிட்ட ஏங்கக்கா, உங்களுக்கு டீ கடையிலபோய் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா?. ம்.. குடிப்போமே ஏன்? எதுக்குக் கேக்குற? அங்க போகும் போது வீட்டுல இருந்தே டம்ளர் எடுத்துட்டுப் போய் டீ வாங்கி குடிப்பீங்களா?
இல்லை. அங்க இருக்கிற டம்ளரிலேயே குடிப்போம் அதுக்கு என்ன இப்போ... அப்படின்னா கடையில எல்லா ஜாதிக்காரங்களும் அந்த டம்ளரில் டீ குடிப்பாங்களே அங்க மட்டும் எப்படிக் குடிக்கிறிங்க மில்லுல ஏன் ஜாதி பாக்குறீங்க?
“அது வந்து கடையில எல்லாம் பாக்க முடியுமா? ஒரு காலத்துல எல்லாம் எங்க ஜாதிக் காரங்க டீ கடை வெச்சிருந்தாங்க. அப்பவல்லா.. வந்து கடைக்குள்ளையே வரமாட்டானுங்க. வெளியே வெச்சிருக்கிற டம்ளருலதான் டீ குடிச் சிட்டு அதை அவனுகளே கழுவி அதே இடத்துல வெச்சிட்டு போயிருவானுக. இப்பத்த அவனு களுக்குத் தனியா டம்ளர் வெச்சா போலிஸ் கேஸ் ஆயிருனு சொல்றாங்க என்னமோ பி.சி.ஆர் கேஸ் குடுத்துருவாங்கனு வேற சொல்றாங்க. இந்த மலையாளத்து காரனுகளும், தெக்கத்துக் காரனு களும் இங்க வந்து டீக்கடை வெச்சதுக்கப் பறந்தா அவனுகங்க கடைக்குள்ள வர்றதும் போறதும், எல்லா டம்ளருல டீ குடிக்குறதும், ஒன்னா உக்காரதும் எல்லா கருமமும் நடக்குது.
ஆனா சில கடைக்குள்ள எல்லா எங்க ஜாதிக்காரங்க போய் அவனுக டீ குடிக்க வந்தா தனி டம்ளருலதா டீ குடுக்கோணும்னு மெரட்டி வெச்சுருக்குமல்ல... நம்ம மில்லுக்குள்ள வேலை செய்யறது யார் யார், என்ன என்ன ஜாதியின்னு தெரியும். அது தெரிஞ்சும் எப்படி அவங்க குடிக்கிற டம்ளரில் நாங்களும் குடிக்குறதுன்னு” கேட்டாங்க. அதுக்கு நான், அதுல என்ன ஒட்டிட்டு வருதுனு கேட்டேன். அப்போ அவுங்க அப்படி எல்லா குடிக்க முடியாதுன்னே சொல்லிட்டாங்க.
ஒரு நாள் எங்கூட வேலை செய்யுற ‘பத்தக்கா’ தாகம் எடுக்குது எனக்கு தண்ணி வேணுமின்னு கேட்டாங்க. நான் போய் ஒரு கூடையிலே இருந்த வாட்டர் கேனை எடுத்துக் கொண்டுபோய்க் குடுத்தேன். அப்போ இந்தக் கேன் யாரோடது எங்கிருந்து எடுத்துட்டு வந்தையின்னு கேட்டாங்க.
அதுக்கு நான், ‘ராமக்கா’ கூடையில் இருந்து எடுத்தேன்னு சொன்னேன். அதுக்கு பத்தக்கா அவ கூடையிலிருந்து எதுக்கு எடுத்துவந்த? அப்படின்னு கேட்டாங்க. அப்போ நான், உங்க தோட்டத்துல கிணறு வெட்ட வந்தவங்களும், தண்ணீ பாய்ச வந்தவங்களும் அவங்கதானே? அது அவுங்க செய்யற வேலைதான் அது. அப்போ அவுங்க அந்த தண்ணியத் தொடறாங்கள்ள. அந்தத் தண்ணியக் குடிக்கிறீங்க. அது வேற இது வேறையா அது எப்படினு? நான் கேட்டேன். அதுக்கு அந்த பத்தக்காவால பதில் சொல்ல முடியவில்லை.
ஒரு சில மில்லுகள்ள வேலை செய்யும் பெண் களை அவுங்க ஜாதியைச் சொல்லி டாய்லெட்டை சுத்தம் செய்யச் சொல்ற கொடுமையும் நடக்குது.
அதுக்கு நான் என்ன தான் மில்லுக்கு வேலைக்கு வந்தாலும் தாழ்த்தப்பட்டவங்கன்னு சொல்லி அவங்களையே கழுவ சொல்றிங்களே அதற்குக் காரணம் உங்க மண்டையில பார்ப்பான் புகுத்திய சாதியமே என்று நான் சொல்வேன்.
மதிய சாப்பாடு நேரத்தில் பெண்கள் எல்லாரும் சாப்பிடும் போது தாழ்த்தப்பட்டவங்க தனியாக உட்கார வைக்கப்படுறாங்க.
மில்லில் வந்து சேர்ந்த உடனேயும் பெண்கள் கேக்குற கேள்வி நீங்க எந்த ஊரு? என்ன பேரு? எந்தத் தெரு? ஊருக்குள்ள முக்கியமான ஒரு நபரைக் குறிப்பிட்டு அவுங்க வீட்டுக்கு பக்கமானுட்டு
நீங்க, வாங்க, போங்க என்று பேச ஆரம்பிச்சவங்க என்ன ஜாதினு தெரிஞ்சிட்டு நீ, வா, போ என்று ஒருமையாய் பேசறாங்க.
மில்லில் வேலை செய்யுற ஒரு பெண் எனக்கு கல்யாணம்னு சொல்லி பத்திரிக்கை கொடுத்தாங்க. அதை வாங்கிக்கொண்டு கல்யாணத்தேதி அன்னைக்கு அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு போலாமானு கூட வேலை செய்யும் பெண்கள் கிட்ட கேட்டேன். நீ போறதா இருந்தா போ... நாங்க எல்லாம் அங்க வரமாட்டோம்னு சொன்னாங்க. ஏன் என்று கேட்டதுக்கு, அந்தப் பொண்ணு தாழ்ந்த ஜாதிப் பொண்ணு அப்படினு சொல்றாங்க. இதுபோன்ற சாதிய சிக்கல்களும் பெண்களுக்கு நிகழ்கிறது என்பது வேதனையாக இருக்கிறது.
மில்லில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் வேலைக்கு வரும், வெளிமாவட்டப் பெண்களையும், அவுங்க என்ன ஜாதியோ என்ன குலமோ என்று இழிவாகப் பார்க்கும் நிலைமையும் உள்ளது. உதாரணத்துக்கு, நான் வேலை செய்யுற மில்லில்கூட ஒரு அக்காவை, ஒரு பெண் அம்மானு கூப்பிட்டப் போ, என்ன சாதியோ, என்ன கிரகமோ என்னை அம்மானு கூப்பிடுற என்று கோவப் பட்டாங்க. அம்மா என்று கூறுவது ஒரு நல்ல உறவு முறை. மரியாதை நிமித்தமும் கூட. அதையும் கூட சாதியப் பார்வையில் தான் ஆலைகளில் பார்க்கிறார்கள்.