ஒரு நாள் நானும் என் நண்பரும் பேசிக் கொண்டிருந்தோம், அப்போது அவர் இந்த உலகத்தில் பல்வேறு முனையங்களிலிருந்து எழும், கிருஸ்தவ, முஸ்லீம், புத்த மதத்தீவிர வாதத்தைப் போலவே இந்தியாவும் தன்னை ஒரு இந்துத் தீவிரவாதத்தின் சாட்சியாக இந்த உலகிற்குக் காட்டிக்கொண்டு இருக்கிறது என்றார்.  உலகில் எந்த ஒரு  மதத்தீவிரவாதக் கட்சியோ அல்லது அமைப்போ நடத்தும் ஜனநாயக ஆட்சி என்பது நிலைக்காத ஒன்றாகும். இது சம்பந்தமாக மதத் தீவிரவாதம் ஆளும் மாநிலங்களில், அந்த அரசுக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் உள்ள உறவுமுறை பற்றிய என்னுடைய ஆராய்ச்சியில் நான் கண்டதும் என்னுடைய நண்பரின் ஒன்றாகவே இருந்தது.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தீவிரவாதம் ஜனநாயக நிறுவனங்கள் இயங்க அனுமதிப்ப தில்லை. அங்குள்ள போப் மற்றும் பிசப், பைபிளின் சட்டப்படிதான் நாடு இருக்கவேண்டும். மதச்சார் பற்றதாக இருக்கக் கூடாது என்று நினைத்தார்கள். இதன் காரணமாக மாக்கியவெல்லி உருவாக்கிய உடோப்பிய இளவரசர் மற்றும் ஜேம்ஸ் ஹோப்ஸ் இணைந்து மதத்தீவிரவாதத்தை ஒழிக்கத் தொடங் கினர். இருவரும் சேர்ந்து மத அதிகாரத்தை மறுத் தனர். இதனால் போப்புக்கும் பிசப்புக்கும் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பல போர்கள் நடந்தன. இப்படிப் போர்கள் நடைபெற்ற காலத்தில் தான் ஜான் லோக்கே, வால்டையர் மற்றும் தத்துவ வாதி ஜாக்கு ரெவ்சோ இணைந்து ஜனநாயகக் கட்டமைப்புகளுக்கான கோட்பாடுகளை உருவாக்கி னார்கள். இதில் மதமல்லாத அல்லது மதத்தை எதிர்க்கின்ற அரசியலமைப்புக் கோட்பாடுகளை உருவாக்கினார்கள். இதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ‘கடவுள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை போடப்பட்டது.

பின்னர் கத்தோலிக்க மத அடிப்படை வாதிகளில் பிரிவு ஏற்பட்டு பிராட்டஸ்டண்டுகள் உருவாகினர். இவர்கள் அதிக சுதந்திரமாகவும். ஏழைகள் மற்றும் அடிமைகளின் ஆதரவாளராகவும் இருந்தனர். உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிராகவும் இருந்தனர். இந்தச் செயல்கள் ஒரு நவீன ஜன நாயகம், தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்தை உறுதிப் படுத்த ஒரு இணைப்பாகப் பயன்பட்டது.

புத்தமதம் இருக்கும் நாட்டில் உதாரணமாக, சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில், மதமும், மதச்சார் பற்றவைகளும் எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். இதன் மூலம் ஒன்று கம்யூனிஸ்ட்கள் ஆள்வதிலும் அல்லது சர்வாதிகாரிகள் ஆள்வதிலும் தான் போகும். புத்த பிக்குகளின் நாட்டை ஆள்வதின் மூலம் ஒரு நிலையான ஜனநாயக அமைப்பை ஒரு போதும் உருவாக்க முடியாது. அதற்கு ஒரு நல்ல உதாரணம் மியான்மர்.

இஸ்லாமிய நாடுகளில் இன்னும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளிலிருந்து அவர்கள் வெளியே வரவில்லை. நாடு எப்போதும் குரானில் சொன்ன சட்டப்படிதான் நடக்கவேண்டும் என்கிறார்கள். ஒருபோதும் மதச்சார்பற்ற தன்மைப்படி நாட்டை வைத்துக்கொள்ளக் கூடாது என்று நினைக் கிறார்கள். ஒவ்வொரு இஸ்லாமிய நாடும் ஒவ்வொரு விதப் பிரச்சனையில் இருக்கின்றன. இந்தச் சூழலினால் தான் “அரபு வசந்தம்” என்ற புரட்சி 2010 இல் ஏற்பட்டது. அதன் பிறகும் அவர்கள் அந்த மதத்தை விட்டு வெளியே வரவில்லை.  மனிதனின் ஒவ்வொரு பகுதியும் குரான்படி தான் இயங்க வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் உலகத்தின் மனித உரிமையின் மகத்துவம் இன்னும் உறுதிப்படுத்தப் படாமலே இருக்கிறது.

பிஜேபி ஒன்றும் சுயமாக வளரவில்லை. தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மூலம் தான் அதன் வளர்ச்சி ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸும் மற்ற மத அமைப்புகளான கிருஸ்தவ, இஸ்லாமிய, மற்றும் புத்தமதம் போல், வேதத்தின் படிதான் அரசிய லமைப்பு இருக்கவேண்டும், மதச்சார்பற்ற அரசியல மைப்பு தேவையில்லை என்கிறது. பிஜேபி ஆர்.எஸ்.எஸ்-ன் உதவியுடன் இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டிருக்கிறது. இந்த பத்தாண்டில் ஜனநாயக அரசியலமைப்புகளில் அதிகமான பதற்றத்தைத்தான் உருவாக்கி இருக்கிறது. இந்த நாட்டில் மனுதர்ம மற்றும் வர்ணாசிரம கொள்கைகளை புகுத்த முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது. இது இந்து நாடு என்று வரையறுப்பதில் தான் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.  தேவையற்ற சாதி அமைப்புகளும், தேவையற்ற ஆன்மீக உரிமைகள் கொண்ட மதமும் இங்கு தான் உள்ளது.

தலித், இதர வகுப்பினர், மற்றும் பழங்குடி யினர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட இந்து மனுதர்மம் மறுக்கிறது. இந்த நாட்டில் மூன்றே மூன்று சாதிகள் தான் அரசியலமைப்பு, தங்களை மிகவும் பலவீனமானவர்களாக மாற்றியதாக உணர் கிறார்கள். அவர்கள், பார்ப்பனர், பனியா, மற்றும் சத்திரியர்கள். இவர்கள் இடஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச்சட்டம், ஆண், பெண், சட்டங்களுக்கு எதிரானவர்கள். மதச்சார்பற்ற சட்டம் மற்றும் அமைப்புகள் மூலம் தான் நாட்டில் பல சட்டங்கள் எஸ்.சி. எஸ்.டி, ஒ.பி.சி வகுப்பினரை சென்றடைந்திருக்கிறது.

தீவிர இந்துத்துவவாதிகள், அரசியலமைப் புக்கு எதிரானவர்கள் அதிகமாக காங்கிரஸில் இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் நேரு அவர்கள் ஒரு பார்ப்பனராக இருந்த போதிலும், தனது கொள்கைகளில் முதன்மையாக இந்துத்துவத்தை எதிர்த்தார். அது மட்டுமில்லாமல் காங்கிரஸ் தன்னிச்சையாகச் செயல்படும் அரசியல் கட்சியாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத் தீவிரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இயங்க வில்லை. இடையில் இந்து மகா சபா, காங்கிரசைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்தது. அதனை காந்தியும், நேருவும் புரிந்து கொண்டு, அதன் தொடர்பைத் துண்டித்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ இனத்தை மட்டும் தான் கட்டுப் படுத்துகிறது என்று பல பேர் நினைத்தார்கள். ஆனால் தலித்,  பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் தங்களுடைய நலனுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்படுவதை உணர ஆரம்பித்தார்கள். முஸ்லீம், மற்றும் கிறிஸ்தவ இன மக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அந்த மக்கள் தங்களுக்கான ஆதரவை உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தன் சக இன மக்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இந்தியாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, இதர பிற்ப்படுத்தபட்ட மற்றும் பழங்குடியின மக்கள், தங்களுக்கான ஆதரவையோ, அழுத்தத்தையோ வெளி உலகிலிருந்து பெறமுடியாது.

2014 தேர்தலுக்குப் பிறகு, இந்த மக்கள் (எஸ்.சி, ஓ.பி.சி, எஸ்.டி) மோடியை மிகவும் நம்பினார்கள், மோடி இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அதனால் நமது மக்களின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடுவார் என்று நம்பினார்கள். பாவம் அவர்களுக்குத் தெரியாது, மோடி ஒன்றும் நேரு, மற்றும் இந்திரா காந்தி அல்ல, நேரடியாக எவ்வித மத அமைப்புகளின் கட்டுப்பாடு இல்லாமல் ஆட்சி செய்வதற்கு. பிஜேபி ஒன்றும் காங்கிரஸ் அல்ல, ஒரு தனி நபர் வழிகாட்டுதலின் படி செல்ல, பிஜேபி முழுக்க தீவிர இந்துத்துவ வாதிகளால் நடத்தப்படும் ஒரு கட்சி, குறிப்பாக சத்திரியர்கள் ஆதிக்கம் நிறைந்தது.

சத்திரியர்களில், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மட்டுமே, தாழ்த்தப்பட்ட, இதரபிற்படுத்தப்பட்ட, மற்றும் பழங்குடி மக்களின் பக்கம் இருந்தவர். சமூகநீதிக்காகப் பாடுபட்டவர். மண்டல் கமிசன் உருவாகவும், அதனால் தன் ஆட்சியையும் இழந்தவர்.

பிஜேபி முழுக்க ஆர்.எஸ்.எஸ் ஆல் இயக்கப்படுகிறது. மோகன் பகவத் என்கிற பார்ப்பனரால் தலைமையேற்று வழி நடத்தப்படுகிறது. மோகன் பகவத்துக்கு ஜனநாயக அமைப்புகளின் மீது எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. அருண் ஷோரி போன்ற இந்துத்துவவாதிகள் மோடியுடன்  இணக்கமாக இல்லாவிட்டாலும், தீவிர இந்துத்துவம் என்ற கொள்கையில் உடன் படுகிறார்கள். இந்த மாதிரியான சிந்தனை ஜனநாயக அமைப்புகளுக்கு எதிர்ப்பாகத்தான் இருக்கும்.

உண்மையில், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி, இதரப் பிற்படுத்தப்பட்ட மக்களை, தலித் மக்களுக்கு எதிரானவர்களாக மாற்றும் முயற்சியில் இந்துத்துவ வாதிகள் செயல்படுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களைப் பயன்படுத்தி, மீண்டும் ஒரு முறை இந்துத்துவவாதிகள் ஆட்சியைப் பிடித்துவிட்டால், ஜனநாயக அமைப்புகளைக் கொஞ்சம், கொஞ்ச மாகப் பிரித்து, சிதைத்து, ஒரு இந்து சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். அனைத்து இடஒதுக் கீட்டுப் பாதுகாப்புச் சட்டங்கள், முழுவதையும் அழித்துவிடுவார்கள். எடுத்துவிடுவார்கள்,

இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் பாரம் பரியம், பொருளாதாரம் அனைத்தும் சிதைந்து போகும். இந்துத்துவவாதிகள் இதைப்பற்றி கவலைப் பட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு தான் இன்னொரு உலகமான சொர்க்கம் இருக்கிறது. அது அவர்களை அப்படியே வைத்திருக்கும். முஸ்லீம் சர்வாதிகாரிகளைப்  போல் இந்துத்துவவாதிகளும் சொத்துக்களைக் குவிப்பார்கள், லிபியாவின் கடாபி, பாகிஸ்தானின் சர்வாதிரிகள், ஜியா உல்  கஹ், பர்வேஸ் முஸ்ரப் போல இவர்களும் சொத்துக்களை குவிப்பார்கள்.

சாதாரணமாக மதவெறி ஆட்சியாளர்கள், உற்பத்தி முறை, விநியோக முறை, மக்கள் நலன், இதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டார்கள். இந்தியாவில் அசோக மன்னரைத் தவிர வேறு யாரும் மேற்கண்ட விசயங்களில் அக்கறை இல்லாதவர் களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இந்துத்துவ வாதிகளுக்கு அசோக மன்னரின் மீது ஒருபோதும் மரியாதை இருந்தது கிடையாது. அந்த ஒரு காரணத்திற்காகத் தான் நேரு அவர்கள், அசோகரின் அடையாளங்களைத் திரும்பக் கொண்டுவந்தார். தேசியக் கொடியில் உள்ள சக்கரம், ரூபாயில் உள்ள மூன்று சிங்கங்களின் தலைகள் போன்ற சின்னங் களை கொண்டுவந்த போது இந்துத்துவவாதிகள் கடுமை யாக எதிர்த்தனர்.

                ஒருவேளை தற்போதுள்ள அரசியலமைப்பு தொலைந்தால் மீண்டும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்துக்குத் தான் செல்லவேண்டும் என்பதை தலித் அறிவுஜீவிகளும், இடஒதுக்கீட்டிலிருந்து உருவான மத்தியதர வர்க்கமும்  புரிந்துள்ளார்கள். அந்த நெடிய பயத்தின் காரணமாக நடந்தது தான், ஏப்ரல் 2, 2018 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தமும் ‘தலித் வசந்தம்’ என்கிற அணி திரட்டலும்.. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் தங்கள் மீது அதிகமாக இருப்பதால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்துத்துவவாதிகளை ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றி முன்னறிந்து செயல்படக்கூடிய, நல்ல வளர்ச்சியடைந்த, சூத்திரத் திறன் இந்த நாட்டிலில்லை. ஆனால் இந்த அரசிய லமைப்பு தொலைந்தால் சூத்திரர்களின் நிலையும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு சென்றுவிடும்.

அரசாங்க அமைப்புகளில் இந்துத்துவத்தின் வளர்ச்சிக்கான சமிக்ஞைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அரசும், அதிகாரிகளும் முழுவதும் இந்துத்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டார்கள். நீதித்துறையும் மெதுவாக அந்த திசையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.  எப்படி காப்பாற்றப் போகிறோம்? விவரிப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது

தமிழில்: பெரியகுளம் குமரேசன்

Pin It