நாஞ்சில் நாட்டில் ஒரு சிறு தெருவில் தறிநெசவு செய்யும் ஏழை முஸ்லிம்களின் கள்ளங்கபடமற்ற பாமர வாழ்வை, எளிமையும், தூய்மையும் நிறைந்த அவர்களின் மொழியிலேயே வெளிப்படுத்துகிறது இந்நாவல், தொன்மத்தில் வேர்கொண்ட நடைமுறை நிகழ்வுகளின் நிறைகுறைகள், காலத்தில் முன்னும், பின்னுமான பார்வையில் தெரியும் அப்பட்டம் இவற்றோடு சமகால கொள்கைக் கோட்பாட்டு அரசியல் முரண்கள் சந்திக்கும்போது நேரும் சிதைவுகளை நாவல் தொட்டுக் கலங்குகிறது. வற்புறுத்தலற்ற மேன்மையுடன் தன் சந்தேகங்களையும் உள்ளடக்கி ஆசிரியர் இதன் வழியே தன் கலை நிரம்பிய பரிவை விரவிவிட்டிருக்கிறார். செதுக்கி வைத்த ஒழுங்கு எதையும் காட்டாத இந்த நாவலை ஓர் உயிர்ப்புடைய சமூக ஆவணமாகப் பார்க்கலாம்.

அஞ்சுவண்ணம் தெரு

தோப்பில் முஹம்மது மீரான்

வெளியீடு :அடையாளம்,  1205/1 கருப்பூர் சாலை, புத்தாந்தம்-621310, திருச்சி மாவட்டம், இந்தியா.

தொலைபேசி : 04332 273444

விலை : ரூ.130

 

Pin It