இயல்பை விட்டு விலகியதாய்
இந்த நாட்கள்
 
அகண்ட வெளியில்
அள்ளித்தெளித்த துளிகளை
தேடுவதினும்
கடினாமாகிப் போனது
என் இயல்பை மீட்கப் போராடும்
இந்த நாட்கள்
 
கனவில்
தூக்கங்களை ரசிக்கும்
புதிய உத்தியில்
கைதேர்ந்தனவாய்
மாறியிருக்கின்றன
கண்கள்
 
ஆவல்கள் தானே உவந்து
அரிக்கத் தொடங்கியிருக்கின்றன
ஆவல்களை
 
எந்நேரமும் இயங்கும்
எடைமேடை இதயம்
பாரங்களின் மாறுதல்களை
பழகிக்கொண்ட வண்ணம்
 
அவள் என்ற புதிரில்
தொலைந்தும் தொலையாமல்
இயல்பை விட்டு விலகியதாய்
இந்த நாட்கள்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.