1.Lady

ஆண்களின் விலா எலும்பில்

படைக்கப்பட்டவளாம் பெண்!

இருக்கலாம். எனக்கென்னவோ,

என் இதயம் உன்னிலிருந்து

படைக்கப்பட்டிருக்கலாம்.

உன்னைத்தவிர வேறு யாரையும்

அது நினைப்பதில்லை...

 

2.

நீ எழுந்து போய் விட்டாய்.

ஆயினும்,

நீ சாய்ந்திருந்த

என் தோல்கள்

இன்னும் கனக்கிறது...

 

3.

நீ தரும் முத்தங்களின்

வெப்பங்களை தொலைப்பதால்தானோ

அதை தொலைபேசி

என்கின்றனர்?...


- ராம்ப்ரசாத், ஸ்காட்லாண்ட்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.