பாசி பிடித்துக் கிடக்கிறது
அம்மிக்குழவி
புட்டம் தேய்த்து
விளையாடுகிறார்கள்
குழந்தைகள்

சட்னிக்குத்
தேங்காய் அரைக்கவும்
ரசத்துக்கு
மிளகு பொடிக்கவும்

விரலுக்கு
மருதாணி மசிக்கவும்
வைத்தியத்துக்கு
சாறு அரைக்கவும்
மறந்தே போனாள்
அம்மா அதனை

எல்லாவற்றுக்கும்
மிக்ஸி என்றான
கோபமோ
தன்னை விலக்கிவிட்டாளே


மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.