மழைத்துளி விழுந்த
மண்ணில் எழுந்த
வாசம் நுகர்வதற்குள்
சிக்னல் விழுந்துவிட்டது
.
எந்தப் பேருந்திலும்
ஊனமுற்றவர்கள்
உட்கார்ந்து பார்த்ததில்லை
ஊனமுற்றோர்
இருக்கையில்
.
தண்ணீர் லாரி விபத்து
மக்கள் ஓடோடினர்
குடங்களுடன்
.
கரகாட்டம் முடிந்து
தூங்கப் போனோம்
ஆடியவளைத் தவிர
.
வீடு வந்தும் நினைவில்லை
வழியில் சந்தித்த
நண்பனின் பெயர்
.
சாவு வீட்டில்
நடனமாடியது
ஊதுவத்திப் புகை
.
நெரிசல் பேருந்தில்
திணறாமல் உலவும்
மல்லிகை வாசம்

மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.