ஒவ்வொரு பொழுதும்
ஏமாற்றத்தில் சாய்கிறது

கல்லறையில்
இடறுகின்றன கால்கள்

கனவுத் தளிர்களின் மேல்
எதார்த்தத்தின்
அமிலத் தெறிப்புகள்

ஈன்ற பெண் நாயாய்
தன் குட்டியையே தின்னுகிறது
எதிர்பார்ப்பு

தட்டி எழுப்பினாலும்
புரண்டு படுக்கிறது
வாழ்க்கை

இருந்தும்-
துருப்பிடித்த டிரங்க் பெட்டியின்
அடிவாரத்தில்
உன் புகைப்படத்தின் வடிவில்
மங்காமல் சிரிக்கிறது
நம்பிக்கை.

பச்சியப்பன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.