அன்று மின்னஞ்சலில்
வசைபாடி செய்தியனுப்பியவன்
என்றாவது கைகுலுக்கி சென்றிருக்கலாம்.

விவாதகளமொன்றில்
எதிராகவோ
ஆதரவாகவோ
அணித்திரண்டவர்களிலொருவன்
மிக மிக அருகிலிருந்து
சிரித்து இரசித்திருக்கலாம்.

யாகூ தூதுவனிலோ
ஹாட்மைல் தூதுவனிலோ
குழைந்து குழைந்து நேரங்கடத்தியவன்
எதிர்பாராத தருணமொன்றில்
எதிரியாகி சண்டை வளர்த்திருக்கலாம்.

இணையத்தளங்களில்
நான் எதிர்க்கிற கருத்துக்கு ஆதரவாகவோ
நான் நேசிக்கிற கொள்கைக்கு எதிராகவோ
கருத்துகளெழுதி சீண்டியவன்
என்னோடு இணைந்தே இயங்கியிருக்கலாம்.

எதுவும் நிச்சயமற்றதாகி விட்டாலும்
குழப்பங்களால் குழைத்து கட்டப்படுகிறதிங்கு
நம்பிக்கைக் கோட்டை.!

இ.இசாக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.