குழந்தைகள் மீதான
குற்றச்சாட்டுகளோடு
திரிகிறார்கள்
அனைவரும்

அதற்கான
விடைகள்
அவர்களிடம்
எப்போதும் இருந்ததில்லை

children_370_copyஏனெனில்
அவர்களின் உலகத்தில்
குற்றம் என்ற ஒன்று
இல்லை.

குழந்தைகளுக்கான
உலகத்தை
அவர்களால் மட்டுமே
அழகழகாக
வடிவமைத்துக்கொள்ளமுடியும்

அவர்களால் மட்டுமே
நிலைகுலைக்க முடியும்

தவறிழைத்ததாக
கருதிக்கொண்டு
கடுமையாக தண்டித்த
பெற்றோருக்கு

பிள்ளைகள்
கொடுக்கும் பதிலடி
அடுத்த கணம்
அவர்கள் உதிர்க்கும்
புன்னகை.

ஆழ்ந்த உறக்கத்தில்
புன்னகைக்கிற
அழுகிற
குழந்தை செயல்கள்
ஆய்விற்குட்படுத்த
இயலாதவை.

ஏனெனில்
உறக்கம் என்பது
குழந்தைகளின்
இன்னொரு உலகம் 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.