குழந்தைகளிடம்
சொற்கள் உருபெறும் தருணம்
அவர்களின்
உலகம்
அர்த்தமிழக்கத்
தொடங்குகிறது


பெருநகர அடுக்ககங்களின்
வாடகை
குடியிருப்புகளில்
வளர நேர்ந்த
குழந்தைகளின்
உலகத்தில்
பெற்றோர்
பூச்சாண்டிகள்

தடுப்பார் யாருமற்ற
திறந்தவெளியில்
சுற்றித்திரிவதைவிட
சுகம்
வேறெதுவும் உண்டோ?
குழந்தைகளுக்கு

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.