எல்லாவற்றையும்
மறந்து விடு.
கடைசித்துளி ரத்தமும்
வடிந்த சவமாகு.

நினைவுகளின்
மென்பரப்பை
தீயிட்டுப்பொசுக்கு.

உறவுகளில்
உன்னதமென்று எதுவுமில்லை.

கணங்களில் நிகழ்கிற
ஸ்பரிசத்திற்காக
காலமாய் சுமக்காதே வேதனையை...

கருணை, அன்பு, தாய்மை
யாவற்றுக்கும் பின்னால்
புன்னகைக்கிறது
பணமென்னும் குரூரம்.

லட்சுமிகாந்தன்

More articles by லட்சுமிகாந்தன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.