நரம்பு புடைக்கும் படியாக

புடைப்பு படியும் வாழ்வாக

அமிழ்ந்து மூழ்கும் உடலாக

கணமும்...அனுதினமும்

எதிர்கொள்கிறேன் உன்னை.

குழந்தைகளை கேடயமாக்கி

மோதும்படியான - உனது

போர்த் தந்திரம்...

நிலைகுலையச் செய்கிறது என்னை!

சகிப்பின் உச்சத்தில்

ஸ்பரிசித்து தன்வயப்படுத்தி

காமத்தால் ஆளும் - உன்

சூட்சமம் வாய்த்தவர்கள் வாழ்கிறார்கள்!

பரிதவிப்போ... பதட்டமோ...ஏதுமின்றி

கீறிட்ட தண்டவாளத்தில் - தினமும்

சென்று...திரும்பும்...

ரயிலென நான்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.