கடைசி ஓவர்களைத் தவறாமல் பார்த்து விட
அலுவலகத்திலிருந்து அவசரப் பயணம்
சிக்னலில் ஒருபுறம்
கைக்குழந்தையுடன் பிச்சைக்காரி
மறுபுறம்
வசூல் வேட்டையில் சாலைக்காவலர்
இடதுபுறம் போகலாமென்றால்
மூத்திர வாடை அடிக்கும் முட்டுச்சந்துகளில்
டாஸ்மாக்கர்களின் சுகமான தூக்கம்
வலதுபுறமோ
தண்ணீர்க் குடங்களின் அணிவகுப்பு
நேர்ச்சாலையில்
குழிகளில் தடுக்கி விழாமல் வீடு சேர்ந்தால்
தங்கக்கோப்பை பரிசு நிச்சயம்
தட்டுத்தடுமாறி வீடு சேர்ந்ததும்
கதவு திறந்த மனைவி சொன்னாள்
"இந்தியா வின்"

ஜெ.நம்பிராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.