சிணுங்குகிறது
கை கால்களை ஆட்டுகிறது
பிறகு அழுகிறது
எதுவும் நடவாத போது
தொட்டிலில் இருந்து
தானே இறங்குகிறது
குழந்தை
2.கண்ணாமூச்சி
முழுவதும் மறையாமல்
கொஞ்சம் தெரியும்படி
ஒளிய வேண்டியிருக்கிறது
குழந்தைகளுடன்
கண்ணாமூச்சி விளையாடுகையில்.
- ஜெ.நம்பிராஜன்(
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.