துணி உலர்த்தப் போனால்
கொடிக் கயிற்றில்
எறும்பு வரிசை
.
ஜாதிச் சண்டையில் உயிர்விட்ட
அப்பாவின் புகைப்படத்தில்
கதம்பம்

தொடருமா மழை
ஒரே குடைக்குள்
நானும் அவளும்

பசியோடு மாடு
அதன் வண்டியில்
வைக்கோல் திருடும் குருவி.

ரயில் கடந்த தண்டவாளத்தில்
உயிரோடு சிரிக்கிறது
புளியஞ்செடி

கழுதைக்குத் தெரியுமா
கருணை
சாப்பிடுகிறது
காணாமல் போனவன்
போஸ்டர்

மனிதர்களைத் தின்று
செழித்து வளர்ந்திருக்கிறது
இடுகாட்டுப் புல்வெளி

விதவைகளுக்கு
மணியார்டர் வர
காத்திருக்கிறார்கள்
தபால்கார்கள்

தேக்கு மரம் விற்பனை
ஆணியடித்து விளம்பரம்
வேப்ப மரத்தில்

வாகனங்களின் இரைச்சலில்
சிதைந்துபோனது
பயண வழியில்
உதித்த கவிதை.

மகள் விளையாட
வாங்கி வந்தேன்
பிளாஸ்டிக் பட்டாம்பூச்சி

மாறன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.