Loverகனவுக்கும் காற்றுக்கும்
கட்டுப்படாத என்மனம்
உணவாக உட்க்கொண்டது
உன் நினைவை
மட்டும் தான் பெண்ணே...

சினங் கொண்டு
சித்திரமாய் நீ முறைத்த
பார்வையிலும் கூட
அதை ரசித்து மனம்வெதும்பி
சிரித்தேனே பெண்ணே.......

தினமும் உன்னை
தித்திக்க நினைத்துவாழ்
உயிரினமாய் நான்,
எப்பொழுது மாறினேன்
தெரியவில்லை பெண்ணே....

எனக்காக என் வாழ்வில்
நீ தந்த மாற்றங்கள்
உனக்காக என் வாழ்வை
தர நினைத்தால் ஏமாற்றங்கள்..
மனக்கணக்கு விதியை
யாரேனும் மாற்றுங்கள்....

மாற்றம் ஒன்றே
மாறாதது..
மார்க்ஸ் சொன்னது
பொருந்தாது...

க.அருணபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.