ஐந்து விரல் நுனிகளிலும்
More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
மைப்புள்ளியிட்டு
வரைந்த பொம்மைகள் சிரிக்கின்றன
சாப்பிட அழைத்தும்
கை கழுவ உத்தரவிட்டும்
பிடிவாதமாக மறுக்கிறாள்
பாவம் பொம்மைகள் என்று..
' அவைகளுக்கும் நீ உணவு ஓட்டலாம்..
வா சாப்பிடு..' - என்ற
அம்மாவின் சாமர்த்தியத்தை
விழிகள் கலங்க.. உதடு பிதுங்க
எளிமையாக மறுக்கிறாள்..
' வேணாம்மா... அதுங்க செத்துடும்..! '
-இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )