Credit card lifeகுளிர் சாதனப் பெட்டி கொஞ்சம் உணவில்
கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது
பக்கத்து வீட்டு பாலுவின் அம்மா
அவனுக்கு ஊட்டி விடுவதின் சுகத்தை

வாரத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில்
டாலர்களை நாற்ப்பத்தைந்தால் பெருக்கிக்கொண்டே
கொஞ்சமாய் பேசும் அப்பாவிடம்
தெரிந்து கொள்ள வேண்டும்
அடுத்த வீடு அனந்துவின் அப்பா
கொஞ்சிக் கொஞ்சி சொன்ன
கொஞ்சம் கதைகளை

கணினிகளுக்குள் விளையாடிப் பழக வேண்டும்
முகேஷ் மற்றும் அவனது தம்பிக்கிடையேயான
தலையணை சண்டைகளை

தற்கொலை செய்வதை
சொல்லிவிட்டு சாகக் கூட
ஆளிலா தனிமையில்
எப்படி மனிதத்தைக் கற்றுக் கொடுக்கும்
கிரெடிட் கார்டுகளும் ஏ.டி.எம் கார்டுகளும்? 

லதாமகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.