Loveஎனக்குப் பிடிப்பதெல்லாம்
உனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
உன்னை எனக்கு .

உனக்குப் பிடிப்பதெல்லாம்
எனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
என்னை உனக்கு.

அவரவர்க்கு பிடித்தவற்றோடு
அனுதினமும் சதிராடி
நீர்க்கோல வாழ்வில் நிலைத்து
நெடும்பயணம் விழையும் மனது. 

- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.