இன்று முதல் முதலாக என்னை
அழைத்துச் சென்றனர் வெளியே
சூரிய வெளிச்சத்தில்.
வாழ்வில் முதன்முறையாக
திகைத்து நின்றேன்
வானம்
இவ்வளவு உயரம்
இத்தனை நீலம்
எத்தனை விரிவு !
பயபக்தியோடு உட்கார்ந்தேன்
தரையில் சம்மணமிட்டும்
முதுகை சுவற்றில் சாய்த்தும்.
இந்தக் கணத்தில்
வீழ்வதற்கு வலையொன்றும் இல்லை
போராட்டம் எதுவொன்றும் இல்லை
மனைவியும் இல்லை.
பூமியும் சூரியனும் நானும் தான்.
நான் மிக்க மகிழ்வோடிருக்கிறேன்.
மூலம் : Letters from a Man in Solitary, 1938
Nazim Hikmet.
- புதுவை ஞானம் (
இன்று ஞாயிற்றுக்கிழமை
- விவரங்கள்
- புதுவை ஞானம்
- பிரிவு: கவிதைகள்
More articles by புதுவை ஞானம்
- மருத்துவர் அய்யா அவர்களே!: நச்சிம் இக்மத் (15 ஏப் 2010)
- உன்னை நினைப்பது...: நச்சிம் இக்மத் (13 ஏப் 2010)
- தன் வாலைத் தானே விழுங்கும் தறுதலை உடும்பு (13 ஏப் 2010)
- அறிவு நெறிப்படுத்தப்பட்டது கன்பூசியஸ் (13 ஏப் 2010)
- நீ நேசிக்கும் பசிய தீவினை விடுவிக்க!! (13 ஏப் 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.