01.வந்த போதெதுவும்
சூது வாதில்லை.

போவதற்குள் எத்தனை
பொய்ப்பித்தலாட்டங்கள்?.


02.இன்றென்ன
கிழித்துவிட்டோம்.

நாளை மீது
நம்பிக்கை வைக்க.


03.இன்னொரு காதலென்றால்
இனிக்கத்தான் செய்கிறது.

இருபதிலும்
அறுபதிலும்.


04.நெடுநேரம் பறப்பதில்லை
நைந்த நூலில்
நாள்பட்ட காற்றாடி.


05.கவியெழுதி பிழைத்தல்
கடினம்.
காதலின்றி சாதல்
போல.


06.காதல் போயின்
இன்னொரு காதல்.

07.இருந்தவரைக்கும்
ஏறெடுத்துப் பார்க்கவில்லை.

போனபிறகென்ன
பொன்னாடையும்
பூமாலையும்.


08.சலிக்க சலிக்க
புணர்.

சாவதற்கு முன்
உணர்.


09. இன்னொரு நாள்
இன்னுமொரு நாள்
இப்படியே இன்னும்
எத்தனை நாள்.

10. இருப்பதற்கா?
இறப்பதற்கா?
இப்படி எரியுதிந்த
மெழுகுவர்த்தி?

11.இருந்து இளைப்பாறி
பசையான இடம்பார்த்து
பறந்து நீ போக
இவன் முகத்திலென்ன
இளிச்சவாயன் என்றா
எழுதி ஒட்டிஇருக்கு?

12.சொன்னபடி
சொல்படி

சோத்துக்கு
சிங்கியடி.


செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It