வெயிலில் மழைபோல்
More articles by ஆதி வள்ளியப்பன்
- தமிழ்ப் பின்னணியில் சுற்றுச்சூழலும் காலநிலை மாற்றமும்: தொடக்கநிலைக் குறிப்புகள் (24 டிச 2025)
- திம்பக்ட்டு நிகழ்த்திய அதிசயம் - மாதவி டாடா (24 அக் 2013)
- ஆறு கால் ஆச்சரியம் (14 பிப் 2013)
- ஒரு மரணம், ஒரு செய்தி - சமையல் நிபுணர் ஜேக்கப்பை முன்வைத்து... (05 நவ 2012)
- மரங்களே பிரச்சினைகளுக்குத் தீர்வு - வாங்காரீ மாத்தை (30 அக் 2012)
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்த்துளிகள்..
குமுறும் வானமாய்
உன் மௌனத்தினுள்
வார்த்தைகள்..
பேசாமலும்
பேசிவிட முடியாமலும்
தாழ்ந்துயரும் உன் பொறுமையின்
அளவுகோடுகள்..
ஆதிக்கச் செருக்கில்
முகம் சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...
நானும்
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...
வெயிற்காற்று சுடும்
மின்சாரமற்ற
இந்த இரவில்..
அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா?'
'விசுறவா?' என்கிறாய்..
பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..
உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது?