More articles by ஜெயபிரகாஷ்
- மன அதிர்வுகள் (22 ஏப் 2010)
- பட்டையும் கொட்டையும் (19 ஏப் 2010)
- நான் திமிறி எழும் வேளையில் நீ குனியக்கூடும் (15 ஏப் 2010)
- கரிப்பூசப்படும் உங்கள் மூஞ்சில்.. (12 ஏப் 2010)
- சொரவானமடிக்கும் வெப்ப ஒளி (10 ஏப் 2010)
அறுத்து மாளாமல் எரவானத்தில்
சொருவப்பட்ட அறுவாள்
அரக்கப் பரக்க அலறியடித்து எழும்
அவள் கண்ணுக்குள் சொருகிக் கிடக்கும் நேத்தைய பொழப்பே
வாழ்க்கையாய்ப்போன கிழவிக்கு
அடுப்பங்கரையில் படுத்துறங்கும்
பூனையை துரத்தும் தெம்புமற்று
கொசவானத்தில் சொருகிய
அரிவாளோடு எட்டி நடைபோடும்
வேகத்தில் பின்னுக்குத்தள்ளப்படும்
சேரியின் குடிசை
பொசாயப்பொழுதில் மூன்றாம் நாள்
ஆக்கி வைத்த கம்மங்கட்டியில்
நாளைக்கு ஒதுக்கி வைக்கும்
கிழவியின் லாவகம்
அவள் கரைத்துக் குடிக்கும் கூழோடு
கரைந்துபோகும் அவளது காலம்
இருட்டிக்கிடக்கும் ராத்திரியை உறங்க வைக்க
அவள் சொல்லும் கதை
ஒரு ஊருல ஒரு பண்ணையார்
அவன் வீட்டு அடுப்பில்
ஒரு கிழவியின் சாண்டு வடியும்
-ஜெயபிரகாஷ் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ]