காற்றில் மிதந்து வந்த
வெகுதூரப் பயணத்தின்
முடிவை
ஒரு
பூவரசு மரத்தின் உலர்ந்த
கிளைமேல்
அமரவைத்து
தன் அலகை
இறகுகளில்
மிளிரத் தீட்டி
அடுத்த பயணத்தின்
காற்றைக் கிழிக்க
தயார் செய்தபின்
தான் கடந்து வந்த
அகலப் பாதைகள்
பரிசளித்த
நிகழ்வுகளின் பிரம்மிப்பை
அவைகளின்
நிழல்களும் மீளாமல்
மெய் சிலிர்க்க
உதறித் தொலைத்துவிட்டு
பயணங்கள்
வாழ்க்கையாகக்
கொண்டு
இன்னுமொரு
திசைநோக்கிப்
பரந்தகன்றது
அவ்வேனல்ப் பறவை!
- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
bird_239காற்றில் மிதந்து வந்த
வெகுதூரப் பயணத்தின்
முடிவை
ஒரு
பூவரசு மரத்தின் உலர்ந்த
கிளைமேல்
அமரவைத்து
தன் அலகை
இறகுகளில்
மிளிரத் தீட்டி
அடுத்த பயணத்தின்
காற்றைக் கிழிக்க
தயார் செய்தபின்
தான் கடந்து வந்த
அகலப் பாதைகள்
பரிசளித்த
நிகழ்வுகளின் பிரம்மிப்பை
அவைகளின்
நிழல்களும் மீளாமல்
மெய் சிலிர்க்க
உதறித் தொலைத்துவிட்டு
பயணங்கள்
வாழ்க்கையாகக்
கொண்டு
இன்னுமொரு
திசைநோக்கிப்
பரந்தகன்றது
அவ்வேனல்ப் பறவை!

- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.