பெயரிடப்படாத யானை ஒன்று
More articles by பா.சதீஸ் முத்து கோபால்
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்? (27 பிப் 2017)
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது? (20 பிப் 2017)
- கானமயில் (26 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
- நதி சூழ் நகரம் – ஸ்ரீரங்கப்பட்டினம் (13 ஜூலை 2011)
செத்துக் கிடந்தது.
தந்தம் உடைந்து
துதிக்கை கிழிந்து
குருதி தெறிக்க
அடங்கிப் போனது மூச்சு.
மேலும் ஒரு யானைக் கூட்டம்.
தொடர்ந்து செல்கிறது,
பெயரிடப்பட்டிருந்த தொடர்வண்டி.
உயிருள்ள யாவும் கொல்லும்
உயிரற்ற இயந்திரத்தில்
உறங்கிப் போயிருந்தன
உயிருள்ள பொம்மைகள்.
தினசரிகளில் வண்ணப் படம்
பார்த்துவிட்டு
மெதுவடை தின்று கொண்டிருந்தன,
மேலும் சில பொம்மைகள்.
--
பா.சதீஸ் முத்து கோபால் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பெயரிடப்படாத யானை ஒன்றுசெத்துக் கிடந்தது.
தந்தம் உடைந்து
துதிக்கை கிழிந்து
குருதி தெறிக்க
அடங்கிப் போனது மூச்சு.
மேலும் ஒரு யானைக் கூட்டம்.
தொடர்ந்து செல்கிறது,
பெயரிடப்பட்டிருந்த தொடர்வண்டி.
உயிருள்ள யாவும் கொல்லும்
உயிரற்ற இயந்திரத்தில்
உறங்கிப் போயிருந்தன
உயிருள்ள பொம்மைகள்.
தினசரிகளில் வண்ணப் படம்
பார்த்துவிட்டு
மெதுவடை தின்று கொண்டிருந்தன,
மேலும் சில பொம்மைகள்.
- பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )