loneliness 343திரவ வடிவமெடுத்து
தளும்பிக் கொண்டிருக்கும்
தனிமையின் மீது
அசைவற்று மிதந்து கொண்டிருக்கிறது
கைவிடப்பட்ட
விட்டில் பூச்சி

பொழுதின் குருதியில்
ஊறித்திளைக்கும் அதற்குள்
சர்வ சுதந்திரமாகப் பாய்கின்றன
துளிகளின் மூலக்கூறுகள்

எறும்புகள் கவ்விச்
சென்றிருந்தால் கூட
சற்று ஆறுதலாக இருந்திருக்கும்

ஆனால் இந்த
நிராதரவின் கனம் தான்
உயிரைக் கல்லாக்கி
ஆழ்ந்து ஆழ்ந்து
மிக ஆழத்தில்
அமிழ்த்திக் கொண்டிருக்கிறது அதை

- தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.