நடு நிசியில்
செம்பருத்தி இலையொன்றில்
கை வைக்கிறேன்
இலை நெளிகிறது.
கையில் பிசுபிசுக்கிறது இருள்
வழிந்தோடும் கருப்பு மையாய்
எத்தனை முறை கை அலம்பியும்
இருள் போகவேயில்லை விரல்களிலிருந்து

இன்றிரவு நான் கனவு காண வேண்டும்
பறவைகளின் தேவதை
சாதிப்பூவின் ஒளியுடல்
மற்றும் நெளியும் செம்பருத்தி
யாவும் சுதந்திரமாய்த் தோன்றுவதாய்
வாக்களித்திருக்கின்றன
கனவில்

ஆனால் முதலில் தூக்கம் வர வேண்டும்
தூக்கத்தை தரும் தேவதை
ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து
இறங்கி வர வேண்டும்
ரீங்கரித்துக் கொண்டிருக்கும்
இந்த இரவுப் பூச்சிகளில் ஒன்று
ஏன் தான் மனிதர்களின் தேவதையாக
இருக்கக்கூடாதோ?

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.