எப்போதாவது
பேருந்து நிறுத்தத்தில்
நிற்பது உண்டு
வந்து போகும் பேருந்துகளை
சும்மா
இந்த வயதில்
பார்க்கக் கூடாதா என்ன

*
பெரியவர்கள் இல்லாத வீட்டில்
சிறியவர் பெரியவர் ஆகி விடுகிறார்
நேரம் பிடிக்கிறது
சிறியவர் மேல்
பெரியவர் வந்து அமர

*
அறியாமை
போதாமை
ஆற்றாமை
வாய் மூடாது
செவி திறக்காது

*
தூரத்திலிருக்கும்
அந்தப் பாறையைப் பார்த்தேன்
பறந்து சென்று
தாவி அமர்ந்துவிட நினைத்த
ஒரு பறவையையும் பார்த்தேன்
இரண்டுக்குமான இடைவெளியில்
பாறை பறவையாகவும்
பறவை பாறையாகவும்
எனக்குத் தான் இரட்டை வேஷங்கள்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.