ஆனிக் காற்று
முடிவுக்கு வரும் நேரம்
பழுக்கத் தொடங்கி விட்டன
புளியமரங்கள்.
கால்நடையாக செருப்பின்றி
பள்ளி செல்லும் போதும்
திரும்பும் போதும்
வெறுங்கையாய் விட்டதே இல்லை
கால்சட்டைப் பைகளை
கர்ப்பிணியாக்கும் புளிய மரங்கள்,
இப்போது கனவிலும்கூட வருவதில்லை
புளியமரங்களற்ற ஊர்ப்புறங்கள்,
புளியமரங்களற்ற சாலைகள்
அருகில் நீயுமற்ற நெடும்
பாலையாய்ச் சுடுகிறது.
கொத்தோடு சாய்க்கும்
உன் கூர்க்கண்
கல்லெறியும் போதெல்லாம்
இனிப்புக் காய்ச்சிப் புளிய மரமாகிறேன்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.