அறிதலின் அறியாமை.

அவர்கள் கேட்டார்கள்
உண்மை சொன்னேன்.
அவர்கள் கேட்டார்கள்
உண்மை சொன்னேன்.
அவர்கள் கேட்டார்கள்
உண்மையைச் சொன்னேன்.
பிறகவர்கள் என்னிடம்
பொய் சொன்னார்கள்.
பிறகவர்கள்
பொய் சொன்னார்கள்.
பிறகவர்கள்
பொய்யைத்தான் சொன்னார்கள்.
என்னைப் போல
அவர்கள் இல்லையென
நான் அறியும் பொழுது
அநியாயங்கள் யாவையும்
நிகழ்த்தி முடித்தார்கள்.
பிறகு நான்
பொய்கள் சொல்ல
ஆரம்பித்தேன்.
அவர்களும்
மெய்யின் சாயலில்
பொய்யைத்தான் சொன்னார்கள்.
நாங்கள்
பொய்ப் பொய்யாய்
பேசுவதில்
புலங்கித் திளைக்கலானோம்.
இந்த
உலகம் பொய்யாலானதென
அறிய இழந்தது
மெய்யாலுமாக
கொஞ்சம் அதிகம்தான்
வயது உட்பட.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.