இதயங்கள்
அத்துவானக் காடாகி விட்ட
நகரத்தில்
வனாந்திரம் என்பது
மொட்டை மாடி தான்

மெய் சிலிர்க்க ஒரு தீண்டல்
உடைந்து கசிய ஒரு வார்த்தை
கிடைக்காத தெருக்கள்

கல் குழிகளை வயிறாக
ஏந்தித் திரியும் சீவன்களை
எப்படி திருப்தி படுத்த ?

காய சண்டிகைகள்
நிறைந்த ஊர் இது

பிளாஸ்டிக் மொக்கு புன்னகைகளையும்
ரப்பர் வார்த்தைகளையும் வாயில் அதக்கி
ஊரெல்லாம் சுற்றி விட்டு
இரவில் வீடு வந்து
சுத்தமாக குளித்து விட்டு
கண்ணாடி முன் நின்றால்
வேறு ஆள்

என் பெயர் என்னவென்று
குழந்தைகளைத்தான்
கேக்க வேண்டும்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.