பிடித்த கிழமை ஆக
இந்தக் கிழமையை
அனுமதி

தோட்டப் பூவில்
தொட்டுப் பார்த்து
தோழி கண்டுபிடி

குட்டிச் சுவரிலும்
கோபுரமென ஒருவன்
அமர்ந்திருப்பான்

குறுக்கு சந்துக்கும்
கூட்டி வந்து காட்டு
நெடுக்கு பாதங்களை

மனமசைக்கும் பாடல்கள்
இருக்கட்டும்
மறந்த சிறந்த ஒன்றை
யோசி

ஊருக்குள் சும்மா நட
ஒளி போல இருள் போல
இரண்டும் சேர்ந்த நிழல் போல

விடிந்து விட்டதை
இன்றைக்கும் சொல்லிக்கொள்
மனிதன் மகத்தான மறதி

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.