கடந்த காலத்திற்கும்
எதிர் காலத்திற்கும்
நடுவில் இருக்கும்
ஒற்றைப் புள்ளியாய்
எதிர்கால இனிப்புகளையும்
கடந்த கால கசப்புகளையும்
இதயமெங்கும் பூசிக்கொண்டு
பெரும் சுமையுடன்
வலசை போகும்
வண்ணத்துப் பூச்சிகளின்
கூட்டத்தில் அவளும்
ஒருத்தி!

- கு. சிதம்பரம், சென்னை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.