18 படிகளையும் மூழ்கடித்து
முத்தமிட்டு
தழுவியபடி ஓடுகிறது
மண்ணுலகிற்கு கேடாய்
மக்காத நெகிழிக் குப்பைகளை
சேர்த்துக் கொண்டு...
ஆடி பிறந்தாலே கூடுதல்
பதற்றமுடன் ஆறுகள்.
தலை மூழ்கியும்
தலையில் அள்ளித் தெளித்தும்
திரும்புகிறார்கள்
தலைக்குள் மண்டிய குப்பைகளுடன்...
தாயைக் காப்பாற்ற வேண்டியவர்கள்
தாய்க்குக் கொள்ளி வைத்து விட்டுத்
தூக்கி எறிந்து போகிறார்கள்...
மனிதர்களைப் போல
கொடுத்ததைத் திருப்பித் தராமல்
போகும் வழக்கம்
நதிக்கும் கடலுக்கும்
இருந்ததில்லை.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.