மூச்சை இழுத்து
விடச் சொல்கிறாய்.
உயிர் மூச்சைப்
பிடித்துக் கொண்டு நடக்கிறோம்.
நாடிகளில் காதலின் துடிப்புகள்.
சாதிய வெறி
பிடித்த காற்று
திசையாவிலும் ஊளையிடுகிறது,
நுரையீரலை விற்கும்
விளம்பரதாரனிடம் சிக்கி
மூச்சு முட்டும் நிலத்தில்
உதிர்ந்து கிடக்கிறது
ஆணவ மண்டையோடுகள்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.