சாயங்காலம்
மிகவும் பலகீனமாக
மடிந்து கொண்டிருக்கும் போது
மேகங்கள் கிழிந்து தொங்கும் திரைச் சீலைகள்
நட்சத்திரங்கள் ஒட்டுப்போட்ட பாவாடைகள்
அத்துமீறி கத்தும்
இரவுப் பூச்சிகளுக்கு பயந்து
வாலை சுருட்டி குழைந்து கொண்டு
விடைபெற்றுக் கொண்டிருக்கும்
இது போன்ற ஒரு அரூபமான பொழுதில்
நீ என் ஞாபகத்திற்கு வருவது
இது எத்தனையாவது முறை சொல்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.