1.

ஒவ்வொருவருக்காக
ஒவ்வொன்றைக் கைவிடுகிறேன்.

இழக்க இழக்க
இலகுவாதல் வரம்!

நீரை இழப்பதாய் வருந்துவதில்லை,
ஆறு ஓடிக் கொண்டிருப்பது
அதிக இடங்கள் சேருவதற்கே!

இழப்பின் சுமை வருத்தாத வாழ்க்கை –
பேரானந்தம்!

2.

விடு(ம்)க(வி)தை!

இதில் ஒன்றும் இல்லை என்கிறார்கள்.
எதில் என்ன இருக்கிறது என்கிறேன் நான்...

இல்லை என்பதையும் தேடிக்
கண்டுபிடிக்கிறார்கள்.

3.

அவ்வளவு சீக்கிரம்
என்னை நீங்களும்
நிராகரித்து விடாதீர்கள்.

உங்களை யாராவது நிராகரிக்கும்போது
கட்டாயம் நான் தேவைப்படுவேன்!

4.

கடவுள் இருந்திருந்தால்
நன்றாகத்தான் இருந்திருக்கும்.

அவரும் நினைப்பார்!

5.

களையெடுக்கும் கை
தான் உரிமையுடன்
பூவையும் கொய்கிறது!

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.