கவனமின்றித்tap_130
திறந்து வைக்கப்பட்ட
அரசுத் தண்ணீர்க்குழாய்
ஒன்றில் ...
உடல் குளிர
நனைத்துக்கொள்ளும்
ஒரு நுணல்....

அது
தன் உள்ளத்தில்
தேக்கிவைத்த....
வேனலின்  வெப்பத்தை
நீருக்குப் பரிசளித்து
ரசிக்கிறது....

கிடைத்ததனைத்தும்
சுமந்துகொண்டு
அடுத்த தெருவின்....
சாக்கடையில்
அனாதையாக
விழுந்து தொலையும்
தண்ணீர்....!!!

- கலாசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.