pain_230தடுமாறிச் சரிந்த
காலச்சக்கரம்
தன்னை செப்பனிட
என்னிடம் வேண்டியது
கண்களில் நீருடன் ஒரு நாள்.

கோரமான முட்களையும்
நாறும் சதைத்துண்டுகளையும்
அப்புறப்படுத்தி
சிக்குண்டு நகர மறுக்கும்
பல்ச்சகரங்களை
அக்கறையுடன் சுத்தம்செய்து
வழி அனுப்பி வைத்தேன்
தைரியம் கூறி.

கைகொடுத்துப்பிரிந்த
காலச்சக்கரத்தின்
தொண்டைக்குழியில்
மெல்ல இறங்குகிறது
நீலம் பரவிய
ஆலகால விஷம்.

என் உள்ளங்கை
ரேகைப்பதிவுகளில்
இன்றளவும் ஊறுகிறது
ஐந்து தலை நாகமும்
கொஞ்சம் கடலும்
போரில் இழந்த உறவுகளும்.

- பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.