நாடியம்மா
வேளாங்கண்ணி மாதா
நாகூர் ஆண்டவா என
அருகில் வந்து
காசு கேட்டு நிற்பார்.

ஆட்களுக்குத் தகுந்த மாதிரி
சரியான
ஒன்றைச் சொல்வார்
துளிர்க்கும் இரக்கத்தற்காக.

ஒரு வேளை
சாமி சரணமும்
அரோகராவும்
என்னை
ஒன்றும் செய்யாததால்
மூன்றையும்
அழைத்திருக்கலாம்.

நீண்ட காலமாக
அவரும்
கேட்டுக் கொண்டே
இருக்கின்றார்.
நானும்
நகர்ந்து கொண்டே
இருக்கின்றேன்
இரக்கமற்றவனாக அல்ல...

எல்லாக் கடவுளையுமே
அழைக்கின்றார்.
அவர்
தொழிலுக்காக
நான்
தெரிவதற்காக.

இன்றாவது
நான்
கொடுக்கலாம்தான்
அவர்
குடிக்காமலிருந்தால்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.