துருக்கி - சிரியா பூகம்பத்தில்
35,000 பேர் மரணம்
நியூசிலாந்து புயலில்
சிக்கிய மக்கள்
கார் பஸ் விபத்தில்
குடும்பத்தோடு 5 பேர் பலி
இரயிலில் அடிபட்ட
வாலிபர் சாவு
செய்தித்தாளில் தினமும்
இப்படியான செய்திகள்
உச் கொட்டி
நொடிப்பொழுது
கவலை கொண்டு
உயிர்த்தெழும் மனிதம்
செய்தித்தாளை மூடி வைப்பதோடு
மரணிக்கிறது மீண்டும்.

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.