காரணமின்றி
காரியங்கள் பிறப்பதில்லை.
காரியமாக நீ..
காரணமற்று நான்..

குளிர் இரவுகள்
பல
வெம்மையால் இதம்
தந்தாய்.
இதோ அது இன்று
பெரும் எரிதழலாய்
உன் நினைவை உண்டு
இருதயத்தை
சுட்டெரிக்கின்றது.

வெந்து தணியாமல்
துடிக்கும்
சிதைந்த இருதயத்தை,
ரத்த நாளங்களில்
குருதியில்
கலந்து கிடக்கும்
உன் நினைவுகளை,
வா வந்து
உறிந்து, சுவைத்து
பெருமிதம் கொள்,
நீ பலி கேட்கும்
யட்சி என்று.

- போ.ராஜன்பாபு

Pin It