மனவெளியெங்கும்
இறைந்து கிடக்கின்றன
ஆசையிலைகள்
உதிர்த்த பின்பும்
மீண்டும் மீண்டும்
துளிர்க்கின்றன
புதிய இலைகள்!
தள்ளி நின்று
போதி மரத்தை
வேடிக்கைப் பார்க்கிறது
புத்த மனம்! 

***

பக்குவம்!

யாருமற்ற தனிமையில்
கரையிடம்
புலம்பி விட்டு
செல்கின்றன அலைகள்
ஆக்ரோஷமாகப் பொங்கினாலும்
அமைதியாகத் தழுவினாலும்
ஆரவாரம் காட்டாத கரைக்கு
அம்மாவின் சாயல்!

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.