சலசலத்து ஓடும் நதியில்
மௌனமாய்
நீர் அருந்திவிட்டு
கடந்து போக எத்தனிக்கும்
பறவைக்கான கவிதையொன்றில்
மீன்கள் வருகின்றன
உதிர்ந்த பூக்கள் வருகின்றன
வேண்டாமென தூக்கியெறிந்த
உடைகள் வருகின்றன...
இறுதியாய் வேடன் வரும்போது
கவிதையைத் தூக்கியெறிந்து விட்டேன்...

- மு.முபாரக்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.